வேலை கோரும் பட்டதாரிகளாக வடக்கில் 2 ஆயிரத்து 150 பேர் பதிவு
வடமாகாணத்தில் அரச வேலை கோரும் பட்டதாரிகளாக இதுவரை 2 ஆயிரத்து 150 பட்டதாரிகள்  தமது பதிவினை வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
வடமாகாணத்தில்  உள்ள வேலை கோரும் பட்டதாரிகள் அரச வேலை கோரி நேற்றைய தினம் 22 ஆவது நாளாக தமது தொடர் போராட்டத்தினை யாழ்.மாவட்ட செயலக முன்றலில் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் வடமாகாண ஆளுநருடனான கலந்துரையாடலின் போது வடமாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளின் விபரங்கள் கோரப்பட்டிருந்தன. அந்த வகையில் கடந்த ஒருவார காலமாக 2012, 2013, 2014, 2015, 2016ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்குரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
அந்த வகையில் வடக்கில் உள்ள அனை த்து மாவட்டங்களிலும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்தும் ஏனைய பட்டதாரிகள் தமது பதிவினை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 
மேலும் வடக்கு மாகாண சபையால் வழங்கப்பட்ட கால அவகாசமும் வடமாகாண ஆளுநரால் வழங்கப்பட்ட கால அவகாசமும் முடிவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.  
வேலை கோரும் பட்டதாரிகளாக வடக்கில் 2 ஆயிரத்து 150 பேர் பதிவு
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 21, 2017
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 21, 2017
 
        Rating: 


No comments:
Post a Comment