மார்பகத்திற்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை: அதிர்ச்சியில் ஆழ்ந்த பெற்றோர்....
இந்தியாவில் பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு மார்பகத்திற்கு வெளியே இதயம் அமைந்துள்ளது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அஸ்சாம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் Jahirul Isma(29) Tazmina Khatun(28) என்ற தம்பதி வசித்து வருகின்றனர்.
மனைவி முதன் முறையாக கர்ப்பம் அடைந்துள்ளதை எண்ணி கணவர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
இந்நிலையில், பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் மனைவியை கடந்த வாரம் அனுமதித்துள்ளார்.
பின்னர், மனைவிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஆனால், குழந்தையை பார்த்த பெற்றோர் மற்றும் மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பிறந்த குழந்தையின் இதய உறுப்பானது மார்பகத்திற்கு வெளியே அமைந்துள்ளது தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதன் முதலாக குழந்தை இப்படி பிறந்துள்ளதை எண்ணி பெற்றோர் அழுது புலம்பியுள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் பேசியபோது ‘மருத்துவ துறையில் இதனை ectopia cordis என அழைப்பார்கள். மிகவும் அரிதாகவே இவ்வாறு இதயம் வெளியே தெரியுமாரு குழந்தை பிறக்கும்.
தற்போது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், இதுபோன்ற உடல் அமைப்பில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றுவது மிகவும் கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மார்பகத்திற்கு வெளியே இதயத்துடன் பிறந்த குழந்தை: அதிர்ச்சியில் ஆழ்ந்த பெற்றோர்....
Reviewed by Author
on
March 07, 2017
Rating:

No comments:
Post a Comment