நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்: தயாராகும் கல்லறைகள்....
சோமாலியா நாட்டில் மோசமான பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் குழந்தைகள் உணவின்றி உயிருக்கு போராடி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா கடந்த 2011-ம் ஆண்டு முதல் கடுமையான பஞ்சத்தை சந்தித்து வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தினாலும், சமீபத்தில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் ஏற்கனவே இருப்பில் இருந்த அனைத்து உணவுகளும் தீர்ந்துள்ளன.
சோமாலியா நாட்டில் தற்போதுள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை சுமார் 1 கோடியே 20 லட்சம் ஆகும்.
ஆனால், வேகமாக பரவி வரும் பஞ்சம் காரணமாக சுமார் 70 லட்சம் மக்கள் போதிய உணவு, தண்ணீர் இன்றி அன்றாடம் போராடி வருகின்றன.
இதுமட்டுமில்லாமல், பஞ்சத்தில் சிக்கியுள்ள பச்சிளம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், உணவு இல்லாத காரணமாகவும் உயிரிழக்கும் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
சில கிராமப்புறங்களில் பசியால் குழந்தைகள் அடிக்கடி உயிரிழப்பதால் சடலங்களை புதைக்க முன் கூட்டியே கல்லறைகளும் எழுப்பப்படுகின்றன என்பது தான் மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாகும்.
சோமாலியாவில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில் சிக்கி சுமார் 2,60,000 பேர் உயிரிழந்தனர்.
தற்போது ஏற்பட்டுள்ள பஞ்சத்தை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் உயிரிழப்புகள் மிக மோசமாக நிகழும் என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சோமாலியா மற்றும் அண்டை நாடுகளான தெற்கு சூடான், ஏமன் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் இதனை தீர்க்க உலக பணக்கார நாடுகளிடம் சுமார் 700 மில்லியன் டொலர் வரை ஐ.நா சபை நிதியுதவி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்: தயாராகும் கல்லறைகள்....
Reviewed by Author
on
March 10, 2017
Rating:
Reviewed by Author
on
March 10, 2017
Rating:


No comments:
Post a Comment