உலக மகளிர் தினத்தில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த சிறுமி....
நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நிறுவப்பட்ட சிறுமியின் சிலை தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பெண்களின் துணிச்சலைப் போற்றும் விதமாக, ஒரு சிறுமியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
பிரபலமான சீறும் காளைச் சிலைக்கு எதிராக, அச்சமின்றி சிறுமி நிற்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையை ஏராளமானோர் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
உலக மகளிர் தினத்தன்று, அமெரிக்காவில் பல அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை.
பள்ளி, கல்லூரி போன்றவற்றிலும் பெண்களின் வருகை குறைவாகவே இருக்கும். இதனால், பல அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக மகளிர் தினத்தில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த சிறுமி....
Reviewed by Author
on
March 09, 2017
Rating:

No comments:
Post a Comment