விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செல்வம் எம்.பி.அவசர கோரிக்கை.
தொடர் போராட்டத்தின் பின்னர் அண்மையில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு , புதுக்குடியிருப்பு , பரவிப்பாஞ்சான் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று செவ்வாய்க்கிழமை (14) மீள்குடியேற்ற அமைச்சர் ரி.எம்.சுவாமிநாதனிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்,,
யுத்தத்தின் பாதிப்பிலிருந்து மீளாத எம் மக்கள் படையினர் வசமிருந்த தமது பூர்வீக நிலங்களை தங்களது போராட்டங்களினூடாக மீளப் பெற்றிருக்கின்றனர்.

மீளளிக்கப்பட்ட காணிகளில் இருந்த மக்களின் வீடுகள், கிணறுகள், மலசலகூடங்கள் பாவனைக்குற்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன.
இங்கு வாழும் மக்கள் வறுமைக்கோட்டிற்குற்பட்ட மக்கள்.
இதன் காரணமாக மக்கள் மீள் குடியமர்வதற்கு போதிய வசதிகள் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே இவ் விடையம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் ரி.எம்.சுவாமிநாதன் இம் மக்கள் மீளக் குடியமர்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் அவசர வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளேன்.
-தமது காணிகளில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்ற மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசர கடிதம் ஒன்றை மீள் குடியோற்ற அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்,,
யுத்தத்தின் பாதிப்பிலிருந்து மீளாத எம் மக்கள் படையினர் வசமிருந்த தமது பூர்வீக நிலங்களை தங்களது போராட்டங்களினூடாக மீளப் பெற்றிருக்கின்றனர்.

மீளளிக்கப்பட்ட காணிகளில் இருந்த மக்களின் வீடுகள், கிணறுகள், மலசலகூடங்கள் பாவனைக்குற்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன.
இங்கு வாழும் மக்கள் வறுமைக்கோட்டிற்குற்பட்ட மக்கள்.
இதன் காரணமாக மக்கள் மீள் குடியமர்வதற்கு போதிய வசதிகள் இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே இவ் விடையம் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் ரி.எம்.சுவாமிநாதன் இம் மக்கள் மீளக் குடியமர்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் அவசர வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளேன்.
-தமது காணிகளில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்ற மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அவசர கடிதம் ஒன்றை மீள் குடியோற்ற அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செல்வம் எம்.பி.அவசர கோரிக்கை.
Reviewed by NEWMANNAR
on
March 14, 2017
Rating:

No comments:
Post a Comment