மன்னாரில் எரிபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு-எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்-(படம்)
எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகியுள்ள தகவலையடுத்து மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்று திங்கட்கிழமை காலை முதல் நீண்ட வரிசையில் நிற்பதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே மாவட்டத்தில் உள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் குவிந்து வருகின்றனர்.
மன்னார் நகரில் 3 எரிபொருள் விற்பனை நிலையம் அமைந்துள்ள போதும் தனியார் ஒருவரின் எரிபொருள் விற்பனை நிலையத்தில் மாத்திரமே எரிபொருள் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.
ஏனைய இரு எரிபொருள் விற்பனை நிலையத்தில் எரிபொருட்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இந்த நிலையில் குறித்த தனியார் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெற்றோல்,டீசல் போன்றவற்றை பெற்றுக் கொள்ளுவதற்காக வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருட்களை கொள்வனவு செய்து வருகின்றது.
குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் அனைவருக்கும் எரிபொருள் வழங்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவே பெற்றோல் மற்றும் டீசல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(24-04-2017)
பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே மாவட்டத்தில் உள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் குவிந்து வருகின்றனர்.
மன்னார் நகரில் 3 எரிபொருள் விற்பனை நிலையம் அமைந்துள்ள போதும் தனியார் ஒருவரின் எரிபொருள் விற்பனை நிலையத்தில் மாத்திரமே எரிபொருள் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.
ஏனைய இரு எரிபொருள் விற்பனை நிலையத்தில் எரிபொருட்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-இந்த நிலையில் குறித்த தனியார் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெற்றோல்,டீசல் போன்றவற்றை பெற்றுக் கொள்ளுவதற்காக வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருட்களை கொள்வனவு செய்து வருகின்றது.
குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் அனைவருக்கும் எரிபொருள் வழங்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவே பெற்றோல் மற்றும் டீசல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(24-04-2017)
மன்னாரில் எரிபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு-எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்-(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 24, 2017
Rating:

No comments:
Post a Comment