மன்னார் முருங்கனில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி -வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது சாவற்கட்டு கில்லரி விளையாட்டுக்கழகம்
நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முருங்கன் பொதுசன விளையாட்டு கழகத்தால் AKR and Sons அனுசரணையுடன், மன்னார் உதைபந்தாட்ட லீக்கின் ஆதரவுடன் மன்னார் மாவட்ட கழகங்கள் கலந்துகொண்ட அணிக்கு 09 பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வுகள் 23-04-2017 ஞாயிறு மாலை 3:00 மணியளவில் முருங்கைன்பிட்டி பொதுசன விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்வில் இறுதிப்போட்டிக்கு தெரிவான மன்னார் சாவற்கட்டு கில்லரி விளையாட்டுக்கழகமும் முருங்கன் பொதுசன விளையாட்டுக்கழகமும் ஒன்றையொன்று மிகவும் திறமையாக எதிர்த்தாடி இறுதியில் மன்னார் சாவற்கட்டு கில்லரி விளையாட்டுக்கழகம் 01 ற்கு 00 என்னும் கோல் கணக்கில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்.
நிகழ்விற்கு கத்தோலிக்க குருக்கள், பெளத்த மத தலைவர் ஆகியோரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஏ.பிரிமூஸ் சிறாய்வா அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம் மற்றும் உனைஸ்பாரூக் ஆகியோருடன் பல சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

மன்னார் முருங்கனில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி -வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது சாவற்கட்டு கில்லரி விளையாட்டுக்கழகம்
Reviewed by Author
on
April 24, 2017
Rating:

No comments:
Post a Comment