இலங்கையில் முதல் முறையாக நோயாளிகளுக்காக கார் அறிமுகம்...
இலங்கையில் முதல் முறையாக நோயாளிகளின் போக்குவரத்திற்காக கார் சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் அம்பாறை வைத்தியாசாலையில் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை வைத்தியசாலையின் புதிய பிரிவு ஒன்று திறந்து வைக்கும் நடவடிக்கையும் அவரது கையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் அனோமா கமகே, கிழக்கு மாகாண சபை தலைவர் சந்திரதாஸ கலப்பத்தி, முன்னாள் சுகாதார அமைச்சர் பீ.தயாராத், பிரதி சுகாதார பணிப்பாளர் உட்பட பலர் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டனர்.
இலங்கையில் முதல் முறையாக நோயாளிகளுக்காக கார் அறிமுகம்...
Reviewed by Author
on
April 19, 2017
Rating:

No comments:
Post a Comment