வறுமையின் உச்சம்: காட்டின் நடுவே கதறும் 19 குடும்பங்கள்...
வறுமையின் உச்சத்தைக் காட்டும் வகையில் இலங்கையில் வாழும் 19 குடும்பங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருகோணமலைப் பிரதேசத்தில் உள்ள கும்புறுபிட்டிய எனும் இடத்திலேயே இவ்வாறு சோமாலியா நாட்டினை கண்முன் காட்டும் வகையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது குறித்த பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்ததாக கூறப்படும் (சிங்கள) மக்கள் மீண்டும் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
என்றாலும் அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில், அன்றாடம் உணவுக்கு கூட காடுகளை நம்பி வாழ்க்கை நடத்தும் நிலையில் இவர்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தகரங்களினால் மறைக்கப்பட்ட வீடுகளில் வாழும் இந்த மக்கள், கொடுமைகளை அனுபவித்து அன்றாடம் நாளை கழித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றிலும் காட்டுப் பிரதேசங்களால் மறைக்கப்பட்ட பகுதியில் இவர்கள் ஒரு குழுவாக தனித்து வாழ்ந்து கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
இங்கு வாழும் சிறுவர்களுக்கு கற்கும் வசதிகளும் இல்லை எனவும், இதேவேளை அவர்களுக்கு உடல் உள வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இவ்வாறு அடிப்படை வசதிகள் அற்ற இடங்களில் 19 சிங்கள குடும்பங்களை குடியமர்த்தியது ஆட்சியாளர்களின் செயலா எனவும் விமர்சிக்கப்படுகின்றது.
ஒரு பக்கம் முன்னேற்றப் பாதையில் செல்லும் இலங்கைக்குள் இவ்வாறு மக்கள் வாழ்க்கை நடத்துவது இலங்கை நாட்டின் வறுமையையும், அரசுகளின் அக்கறையற்ற தன்மையையும் எடுத்துக் காட்டுவதாக கூறப்படுகின்றது.
வறுமையின் உச்சம்: காட்டின் நடுவே கதறும் 19 குடும்பங்கள்...
Reviewed by Author
on
April 19, 2017
Rating:

No comments:
Post a Comment