வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் தினம் அனுஷ்டிப்பு
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று(12) பணிப்பாளர் அகிலேந்திரன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி பவானி பசுபதிராஜா, பணிப்பாளர் அகிலேந்திரன், பிரதிப்பணிப்பாளர் தமிழினி, சிரேஷ்ட வைத்திய அதிகாரி சுரேந்திரன், தாதிய பரிபாலகர் பாலநாதன், குமாரசிங்கம் மற்றும் வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் அனாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் தாதிய பயிற்சி கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் தாதிய கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் புளோரன்ஸ் நைற்றிங்கேல் அவரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தாதிய உத்தியோகத்தர்களினால் சத்தியபிரமானமும் செய்யப்பட்டது.
தாதிய கல்லூரி மாணவர்களின் பரத நடன நிகழ்வுகள், கண்டியன் நடனம், தாதிய உத்தியோகத்தினரின் பாடல் மற்றும் நகைச்சுவை நாடகம் என பல்வேறு நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் தினம் அனுஷ்டிப்பு
Reviewed by Author
on
May 12, 2017
Rating:

No comments:
Post a Comment