பிக்கப் விபத்து இளைஞன் பலி....
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதியில் பெரிய இத்திமடுப் பகுதியில் மகேந்திர பிக்கப் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு முள்ளியவளை மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
நேற்று அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது, அவ் வழியே வேகமாக பயணித்த மகேந்திர பிக்கப் வாகனம் வேகக்கட்டுப் பாட்டை இழந்துவிபத்திற்குள்ளாக நேரிட்டுள்ளது.
இச்சம்பவத்தில் முல்லைத்தீவு செல்வபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திய நந்தராசா ரொமின்சன் (வயது - 22) என்ற இளைஞனே சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார் விபத்துச் குள்ளான வாகனத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன்,
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிக்கப் விபத்து இளைஞன் பலி....
Reviewed by Author
on
May 14, 2017
Rating:

No comments:
Post a Comment