கலைக்கப்படுகிறது குஜராத் லயன்ஸ் அணி....
குஜராத் லயன்ஸ் அணிக்காக, கடைசி லீக் ஆட்டத்தில் ஆடுவதற்கு முன்பாக அந்த அணியின் தலைவர் சுரேஷ் ரெய்னா வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடுியவில்லை. சூதாட்ட புகார் காரணமாக இவ்விரு வருடங்களும் அந்த அணி ஆட தடை விதிக்கப்பட்டது. எனவே, இந்த காலகட்டத்தில், புனே மற்றும் குஜராத் அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
புனே அணியில் டோனி, அஸ்வின் உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்களும், குஜராத் அணியில் ரெய்னா, ஜடேஜா போன்ற சிஎஸ்கே வீரர்களும் ஆடினர்.
இவ்வாறாக பல அணிகளும் அவர்களை ஏலம் எடுத்திருந்தன. அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களம் காண உள்ளன.
இந்த ஆண்டு சீசனில் குஜராத் லயன்ஸ் இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தை, ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆடியது. பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் தகுதி பெறவில்லை என்பதால், அந்த அணிக்கு இது இவ்வாண்டின் கடைசி போட்டியாகும்.
எனவே அனைத்து தரப்புக்கும் உருக்கமாக நன்றி தெரிவித்து ரெய்னா வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அடுத்த ஐபிஎல் சீசனில் எந்த அணிக்காக ஆடினாலும், தனக்கான ஆதரவை தருமாறு ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கலைக்கப்படுகிறது குஜராத் லயன்ஸ் அணி....
Reviewed by Author
on
May 14, 2017
Rating:

No comments:
Post a Comment