குடிநீர் இன்றி தவிக்கும் கோப்பாவெளி மக்கள்....
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கோப்பாவெளி கிராம மக்கள் குடிப்பதற்கு நீர் இன்றி தவிப்பதாக விசனம் தெரிவித்துள்ளனர் .
கடந்த ஆண்டு பாதையோரம் பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி வைத்து நீர் வழங்கப்பட்டதாகவும் தற்போது இருக்கின்ற சூடான காலநிலையில் குடிப்பதற்கு போதியளவு நீர் இல்லை என்றும் கோப்பாவெளி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் .
சில இடங்களில் குழாய் கிணறு இருக்கின்ற போதிலும் அதனுடாக வருகின்ற நீர் குறைவான அளவே வருகின்றது என்றும் குழாய் கிணறுகள் வீதியோரம் இருப்பதனால் சுமார் 1 கிலோ மீற்றர் வரை சுமந்து செல்கின்ற நிலை உருவாகியுள்ளதகவும் கவலை வெளியிட்டுள்ளனர் .
இந்த கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களுக்கும் சரியான முறையில் நீர் கிடைப்பது இல்லை எனவும் சில நேரங்களில் பலர் மயக்கம் போடும் நிலை கூட உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர் .
சம்மந்த பட்ட அதிகாரிகளே இந்த மக்களது குடிநீர் பிரச்சனைக்கு மிக விரைவில் சிறந்த ஒரு தீர்வினை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் இன்றி தவிக்கும் கோப்பாவெளி மக்கள்....
Reviewed by Author
on
May 25, 2017
Rating:

No comments:
Post a Comment