முல்லைத்தீவில் வீடொன்றின் கிணற்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் மீட்பு....
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் வீட்டின் கிணறு ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மாவட்டத்தில் நீண்ட காலமாக வறட்சி தொடர்வதினால் அப்பகுதியிலுள்ள கிணறுகள் வற்றியுள்ளன. இதன்காரணமாக பொது மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றனர். அத்தோடு கிணறுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே குறித்த கிணற்றிலிலுள்ள மண்ணை அகற்றும் போது கிணற்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் மீட்கப்பட்ட குறித்த கைக்குண்டுகளை இராணுவத்தினர் சென்று பார்வையிட்டதோடு அப்பகுதி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகைத்தந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் வீடொன்றின் கிணற்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் மீட்பு....
Reviewed by Author
on
May 25, 2017
Rating:

No comments:
Post a Comment