5 பேர் உயிரிழப்பு....நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து
போஸ்னியாவின் மோஸ்டார் நகரில் சிறிய ரக விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அதில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
போஸ்னியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மோஸ்டர் நகரில் சிறிய ரக விமானத்தில் திடீரென தீ பிடித்தது.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் குறித்த விமானத்தில் பயணம் செய்த மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் திடீரென தீப்பிடித்தது என்றும் பாதிக்கப்பட்டவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோஸ்டர் விமான நிலையத்தில் ஓபன் டோர் டே எனப்படும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 பேர் உயிரிழப்பு....நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து
Reviewed by Author
on
May 14, 2017
Rating:

No comments:
Post a Comment