தமிழக கபடி அணியின் உரிமையாளர் ஆனார் சச்சின் டெண்டுல்கர்...
புரோ கபடி தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சென்னை அணியின் சக உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் ஆகியுள்ளார்.
2014ல் தொடங்கப்பட்ட புரோ கபடி லீக்கில் டெல்லி, மும்பை, பாட்னா, ஐதராபாத், பூனே உட்பட 8 அணிகள் பங்கேற்றன. இந்த கபடி தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையடுத்து, இந்த வருட போட்டியில் புதிதாக தமிழகம், ஹரியானா, குஹராத், உ.பி ஆகிய நான்கு மாநில அணிகள் சேர்க்கப்படவுள்ளன.
ஐபிஎல் பாணியில் பிரம்மாண்டமான தொடக்க விழா இந்த போட்டிகள் நடைபெறும் நகரங்களில் நடைபெறவுள்ளன
இதுவரை பெயரிடப்படாத தமிழகத்தின் சென்னை கபடி அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சக உரிமையாளர் ஆகியுள்ளார்.
ஏற்கனவே, ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் கொச்சி அணியின் சக உரிமையாளராக சச்சின் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக கபடி அணியின் உரிமையாளர் ஆனார் சச்சின் டெண்டுல்கர்...
Reviewed by Author
on
May 14, 2017
Rating:

No comments:
Post a Comment