பிரான்ஸ் ஜனாதிபதியைப் பார்த்து இப்படி சொல்லிய அமெரிக்க ஜனாதிபதி!
உங்களின் வெற்றி குறித்து தான் இன்று உலகம் பேசிக் கொண்டிருக்கிறது என பிரான்ஸ் நாட்டின் இளம் ஜனாதிபதி இமானுவேல் மக்ரானை புகழ்ந்து பாராட்டியிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிதாக தெரிவு செய்யப்பட்ட அந்நாட்டின் இளம் ஜனாதிபதி இமானுவேல் மக்ரானை சந்தித்து பேசியிருந்தார்.
இதன் போது கருத்து வெளியிட்ட ட்ரம்ப், இந்த உலகமே உங்கள் வெற்றியை பற்றி பேசுகிறது. ஆச்சியர்யப்படும் வகையில் பிரச்சாரம் நடத்தினீர்கள். மிகப்பெரிய வெற்றியாக இருந்தது உங்கள் வெற்றி என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இச் சந்திப்பில், தீவிரவாதம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதன் பின் முதன் முறையாக சவூதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், சவூதி அரேபியா, இஸ்ரேல், சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இத்தாலி சென்ற ட்ரம்ப், வத்திக்கான் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிஸை சந்தித்தார். இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரல்லா, பிரதமர் பயோலோ ஜென்டிலோனி ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் ஜனாதிபதியைப் பார்த்து இப்படி சொல்லிய அமெரிக்க ஜனாதிபதி!
Reviewed by Author
on
May 26, 2017
Rating:

No comments:
Post a Comment