எப்பொழுதும் தமிழர் பக்கம் இந்தியா இருக்கும்! மோடி...
நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று மாலை இடம் பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு குறிப்பிடடுள்ளார்.
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை இலங்கைக்கு வந்தார். அவர், இன்று கொழும்பிலும், மலையகத்திலும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். அதன் பின்னர் உலங்குவானூர்தி மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அங்கு வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினரர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது கருத்து வெளியிட்டுள்ள மோடி, நாங்கள் எப்பொழுதும் உங்களுடனேயே இருக்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.
எப்பொழுதும் தமிழர் பக்கம் இந்தியா இருக்கும்! மோடி...
 
        Reviewed by Author
        on 
        
May 13, 2017
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
May 13, 2017
 
        Rating: 


No comments:
Post a Comment