அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் முறைகேடாக வழங்கப்படும் காணிகள் தொடர்பில் மக்கள் கவலை--- தீர்வு கிடைக்குமா…..???

மன்னார் மாவட்டத்தில் தற்போது நடைபெறும் காணிவழங்கல்  சேவையானது மக்கள் மத்தியில்  பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் தேவையானவர்களுக்கு தேவையானது கிடைக்கவில்லை கிடைக்கப்போவதும் இல்லை என்ற நிலைமை தோன்றியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற சேவைகள் அது சமுர்த்திக்கொடுப்பனவு சிறுகடன் வசதிகள்காணி வழங்கல் சுயதொழில் முயற்சிகள்(கோழிவளர்ப்பு-ஆடு மாடுவளர்ப்பு-தையல்-மோட்டர்உபகரணங்கள்)வீட்டுத்திட்டம்வறட்சிக்கொடுப்பனவுவிவசாயிகளுக்கு இன்னும் இதரகொடுப்பனவுகள் எல்லாம் சரியானமுறையில் பங்கிட்டு அவசியம் தேவையானவர்களுக்கு கொடுக்கின்றார்களா…??? கொடுக்கப்படுகின்றதா….??? என்றால் பதில்…..???


ஏன் இந்தப்பாகுபாடு பாரபட்சம்

மன்னாரான்

வெளிமாவட்டக்காரன்  பிரதேசவாதமும்

இந்து

கிறிஸ்தவர் 
முஸ்லீம் என்ற சமய இனப்பாகுபாடும் வேறுபாடும்.



 மன்னார் மண்ணில் தலைவிரித்தாடுகின்றது. இந்தச்செயலானது மன்னார் மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்திச்செயற்பாடுகள் அனைத்திலும் பங்காற்றுகின்றது என்பது யாவரும் அறிந்தவிடையமே 
ஆனாலும் அரசாங்கச்செயற்பாடுகள் சேவைகளில் அதிகமுனைப்புடன் செயலாற்றுகின்றது யாராலும் தடுக்கமுடியாமல் உள்ளது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அரச திணைக்கள அதிகாரிகள் தமது உறவினர்கள் தொந்தங்கள் நெருங்கிப்பழகுபவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் தமது சேவையினை முதல்வழங்குவதோடு முன்னுரிமையும் அளிக்கின்றனர் இவர்கள் வாழ்வாதாரநிலையானது மாடிவீடு வாகனவசதிகள் நிலையான வேலைவாய்ப்பு தேவைக்கும் அதிகமான வளங்களோடும் செழிப்பாகவுள்ளவர்களுக்குத்தான் உதவிகளும் அரசாங்கச்சலுகைகளை வாரி வழங்குகின்றார்கள்.

உண்மையில் வறுமையில் வாடுபவர்களுக்கும் வீடு காணி இல்லாதவர்களுக்கும் எந்த உதவிகளும் கிடைப்பதில்லை கவலைக்குரியதும் வேதனைக்குரியதுமானவிடையம் தான்

புதியதாக பதியப்படுகின்றவர்களுக்கும் புள்ளி அடிப்படையில்
  • விதவை---
  • கணவன் இல்லாமை(விட்டுச்செல்லுதல்-வேறுதிருமணம் செய்தல்)
  • அரச உத்தியோகத்தர் வேலையில்லாமை
  • சொந்த வீடு இல்லாமை
  • சொந்தக்காணி இல்லாமை
  • யுத்தஇடம்பெயர்வுகளின் பாதிப்படைந்திருத்தல்
  • குடும்பத்தில் உறுப்பினர்களை இழத்தல் இறப்பு
  • அத்தியாவசியதேவைகளை பூர்த்தி செய்யமுடியாத நிலை
  • வருமானமில்லா வறுமையும் ஏழ்மை நிலையும்
  • மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பம்
  • திருமணமான  சொந்த காணி விடு இல்லாதவர்கள்
  • குடும்ப உறுப்பினர்கள் 03 இருத்தல்.
இவ்வாறு புள்ளிவழங்கலுக்கான கேள்விகளை அடுக்கி கொண்டேபோகலாம்.இப்படிக்கேட்கின்ற அத்தனை கேள்விகளுக்கும் பதிலளித்தும் காணிவழங்கலோ  வீட்டுத்திட்டமோ கிடைக்காமல் அவதிப்படும் மக்களின் மனக்குமுறல் சொல்லி மாளாது….

இந்தப்புள்ளியடிப்படையில் எந்தக்கேள்விக்கும் எதிர்மறையான பதிலை வழங்கக்கூடிய நல்லவசதிபடைத்த நிம்மதியாய் வாழ்கின்றவர்களுக்கும்  அரசியல் செல்வாக்கும் அதிகாரிகளின் சொல்வாக்கும் பணம்படைத்தவர்களின் செயல்பாடும் இதற்குபக்கபலமாய் இருக்கின்றது.

இதனால் இருண்டுபோய்கிடக்கின்ற இதயமும் எரிக்கின்ற உணர்வுமாய் சோகமாய் வறுமையுடன் வாழ்க்கை நடத்தும் மக்களின் நிலைதான் என்ன இதையார்தான் தடுக்கப்போகின்றார்கள்  முறையானவழியில் தேவையுடையோருக்கு தேவையானதை வழங்கப்போகின்றார்கள்.
அவசியம் கருதி ஆற்றப்படும் சேவைகள் அல்லல்படுபவர்களுக்கு நல்லவாழ்வினை அமைத்துக்கொடுக்கும் அல்லவா….

மன்னாரை சொந்த இடமாகக்கொண்டவர்கள் தங்களுக்கும் தங்களது பிள்ளைகளுக்கும் சேர்தது அடாத்தாக 30-60பேர்ச் என்று பல்மடங்கு பிடித்து அடைத்து பராமரிக்கின்றார்கள் அது போல ஏனையவரும் தனக்கும் தனது பிள்ளைகளின் குடும்பங்களுக்கும்  காணிகளை பிடிப்பதோடு தங்களது உறவினர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் மன்னாரில் இல்லாதவர்களுக்கும் அளவு கணக்கற்று காணிகளைப்பிடித்து உள்ளார்கள் இதனால் பாதிக்கப்படுவதும் துன்பப்படுவதும் அந்த ஏழை எளியமக்களே யார் இதை உணரப்போகின்றார்கள்…..


மன்னார் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிராமசேவகர் பகுதியான
காணி பிடிக்கும் இடங்களாக----
  • எமில்நகர் பின்பக்கம் தரவைப்பகுதி
  • சாந்திபுரம்
  • சௌத்பார்
  • எழுத்தூர்
  • தரவான்கோட்டை ஏனைய அரசகாணிகள் உள்ள பகுதிகள் அரச அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் செல்வாக்கு இருந்தால் எங்குவேண்டுமானாலும் காணி எடுக்கலாம் எத்தனை பேர்ச் என்றாலும் அதற்குரிய சகல அரச ஆவணங்கள் பதிவுகளும் இலகுவாக கிடைக்கும் உதவிகளும் கிடைக்கும் இதே செயல் ஏழை எளியவர்களின் மட்டில் மௌனித்துவிடும். 

  • சொந்தகாணியுடன் வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு தரவையில்   காணிபிடித்து கொட்டில் போட்டு இருப்பவர்களும் உண்டு தானே....
  •  இதைவிடக்கொடுமை என்னவென்றால் காணிகளை பிடிக்கும் சிலர் பிடித்த காணிகளுக்கு வேலிபோட்டு 30000ரூபா முதல் 40000ரூபாவரை விற்பனையும் செய்வதாக தகவல் இதை யார் தடுப்பது.

இதற்கான தீர்வாக….
  • பாரபட்சம் இன்றி  காணிகளை வழங்குதல்
  • ஒரு குடும்பத்துக்கு கொடுக்கப்படும் 10பேர்ச்காணி போதுமானது.
  • அதிகமாக பிடித்து அடைத்துள்ளவர்களது காணிகளை பறிமுதல் செய்து அதையும் தேவையானவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
  • மன்னார் பிறப்பிடமாக கொண்டவர்களுக்கு முன்னுரிமை அவசியம் அதேபோல் ஏனையவர்களுக்கும் அவ்ர்களின் நிலை கருதி வழங்கலாம் அவர்களும் மக்களே....
  • புள்ளி அடிப்படையில் என்றால் தரப்பட்ட விடயங்கள் அனைத்தும் உண்மை என்று உறுதிப்படுத்தி வழங்குங்கள்.
  •  தங்களின் காணிவழங்கள் சட்டத்திற்கு அமைவாக....
இவ்வாறு செய்தால் உண்மையான தேவையுடையவர்கள் பயனடைவார்கள்.அவர்களது வறுமையும் ஏழ்மையும் விலகும்.

தரவையாக உள்ள வெளிகள் மக்கள் குடியேறி பசுமையாகும் மன்னார் வளர்ச்சி பெறும் அபிவிருத்தி பெறும்.

குறிப்பு - 27-06-2017 அன்று நடைபெறவுள்ள காணிதொடர்பான கலந்துரையாலிலும் காணிவழங்களிலும் மேலே சுட்டிக்காட்டியவற்றை கருத்தில் கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பாதிக்கப்படும் மக்கள் சார்பில் கேட்டு நிற்கிறோம்.

யாரையும் குறை காண்பது எமது நோக்கமல்ல எமது மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் அது நிறைகளாக அதற்காகவே….

-மன்னார்விழி-

குறிப்பு - முறைகேடாக நடக்கும் அரச அதிகாரிகளின் புகைப்படங்கள் உட்பட அதனால் பயனடையும் குடுப்பங்களின் புகைப்படங்களும் எமது இணையத்துக்கு கிடைத்த வண்ணம் உள்ளது ,எப்படி பட்டவர்களை எதிர்காலத்தில் எமது இணையத்தில் புகைப்படத்துடன் செய்தி போட்டு அம்பலப்படுத்த எண்ணியுள்ளோம்  -ஆர் -
 





மன்னார் மாவட்டத்தில் முறைகேடாக வழங்கப்படும் காணிகள் தொடர்பில் மக்கள் கவலை--- தீர்வு கிடைக்குமா…..??? Reviewed by Author on June 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.