மாகாணசபை உறுப்பினா் அரியரட்னத்திற்கு எதிராக பாராளுமன்றஉறுப்பினா் சிறிதரன் காவல்துறையில் முறைப்பாடு
பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரனின் உத்தியோகபூர்வ கடிதத்தலைப்பினையும், பதவி இலட்சினையும் பயன்படுத்தி அவா் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் எழுதியது போன்று போலியாக கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைபாடு செய்திருக்கின்றார் ,
நேற்று சனிக்கிழமை கிளிநொச்சி காவல் நிலையத்தில் செய்யப்பட்ட குறித்த முறைப்பாட்டில் 16 முகநூல்கள் மீதும் , சில இணையத்தளங்கள் மீதும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த முறைப்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தன்னுடைய கட்சியின் கிளிநொச்சி வடக்கு மாகாண சபை உறுப்பினா் பசுபதி அரியரட்னம் மீதும் முறைபாடு செய்திருக்கின்றார். மாகாண சபை உறுப்பினா் தனது முகநூலில் குறித்த கடிதத்தை பதிவேற்றியமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறைப்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தன்னுடைய கட்சியின் கிளிநொச்சி வடக்கு மாகாண சபை உறுப்பினா் பசுபதி அரியரட்னம் மீதும் முறைபாடு செய்திருக்கின்றார். மாகாண சபை உறுப்பினா் தனது முகநூலில் குறித்த கடிதத்தை பதிவேற்றியமை தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்படுகிறது.
மாகாணசபை உறுப்பினா் அரியரட்னத்திற்கு எதிராக பாராளுமன்றஉறுப்பினா் சிறிதரன் காவல்துறையில் முறைப்பாடு
Reviewed by NEWMANNAR
on
June 26, 2017
Rating:

No comments:
Post a Comment