மலைகளின் கீழ் விரிக்கப்பட்ட பிரகாசமான நீலக் கம்பளம்! கொதிக்கும் சொர்க்கத்தின் வாசல்!
நாம் வசிக்கும் பூமியில் பல விசித்திர இடங்களோடு மனதை ஈர்க்கும் அழகிய இடங்கள் பலவும் இருக்கின்றன.
அதே போல் இயற்கையாக அமையப்பெற்ற நீர் நிலைகள் பல்வேறு வகையான வண்ணங்கள் கொண்டு அமைந்திருப்பது வியப்பிற்குரியது.
அவ்வாறு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த, வண்ணமயமாக இயற்கை அமைத்த அழகிய நீர் நிலைகளில் ஒன்று, ஹில்லியர் ஏரி (Lake Hillier). இது தென் மேற்கு அவுஸ்ரேலியாவில் காணப்படும் ஓர் உப்பு நீர் ஏரியாகும்.
இந்த ஏரி மென்சிவப்பு (Pink) நிறத்தில் காணப்படுகின்றமையே இதன் விஷேட அம்சமாகும். பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சியளிக்கும் இந்த வண்ணமயமான ஏரி.

கனடாவில் உள்ள பான்ஃப் தேசியப் பூங்காவில் உள்ள பியோட் ஏரியும் பார்ப்பதற்கு அழகாக காட்சி தருகின்றது. பிரகாசமான வண்ணத்தோடு காட்சி தரும் இந்த ஏரியும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவர்ந்தது.
நீலக் கம்பளத்தை மலைகளின் கீழ் விரித்ததைப் போல் மிகவும் பிரகாசமான தோற்றத்தோடு காட்சி தரும் இந்த ஏரி உண்மையாகவே இயற்கை அமைத்த விசித்திரங்களில் ஒன்றே.

அதேபோன்று யப்பான் நாட்டில் Kyushu தீவில் நீர் நிலைகள் உள்ளன. இவை சிவப்பு நிறத்தோடு காட்சியளிக்கும். அது மட்டுமல்லாது இவை வெந்நீர் ஊற்றுக்களாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தில் உள்ள Tongariro தேசியப் பூங்காவில் காணப்படும் குளம் பச்சை நிறத்தில் காணப்படுகின்றது. எரிமலைத் தாதுக்கள் காரணமாக இங்கு காணப்படும் குளங்கள் இந்த அழகிய பச்சை வண்ணத்தை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பொலிவியா நாட்டில் (ரெட் லாகூன்) Red Lagoon என்ற உப்பு நீர் ஏரி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த இடம்.
பார்வைக்கு வேறு ஓர் உலகத்தில் இருக்கும் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தையும் விஞ்சிவிடும் அளவு அழகுடன் இருக்கின்றது வயோமிங்கில் அமைந்துள்ள வெந்நீர் ஊற்றுக் குளம்.
உலகில் உள்ள வெந்நீர் ஊற்றுக்களில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள இந்த இடம் வண்ணமயமாக காட்சி தரும். 160 பாகை பரனைட் இற்கும் அதிகமாக வெப்பநிலையை அடையக் கூடிய இந்தக் குளம் 160 அடி ஆழமானது எனவும் கூறப்படுகின்றது.

கொதிக்கும் இந்த இடம் வானவில்லின் வர்ணங்களைக் கொண்டு இருக்கின்றது. ஆகாயத்தில் இருந்து பார்க்கும் போது இது ஓர் சொர்க்கத்தின் நுழைவாயில் போன்று காட்சியளிப்பதாக சுற்றுலாப்பயணிகள் வியப்போடு தெரிவிக்கின்றனர்.

மலைகளின் கீழ் விரிக்கப்பட்ட பிரகாசமான நீலக் கம்பளம்! கொதிக்கும் சொர்க்கத்தின் வாசல்!
Reviewed by Author
on
June 10, 2017
Rating:

No comments:
Post a Comment