பிரான்ஸ் ஜனாதிபதியின் பிரமிப்பூட்டும் மாளிகை.....
பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானும் அவர் மனைவி பிரிஜ்ஜெட்டும் ஜனாதிபதிக்கான மாளிகையான எலிசீ பேலஸ்க்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள்.
மேக்ரானும், அவர் மனைவி பிரிஜ்ஜெட்டும் இதற்குமுன்பு பாரீசில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதிக்கு அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை என்று கருதப்பட்டதால் அவர் தனது மனைவியுடன் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ மாளிகைக்கு மாறியிருக்கிறார்.
இந்த எலிசீ பேலஸ் பிரான்ஸ் ஜனாதிபதிகள் வசிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடமாகும். இங்கு கடந்த 1848-ல் இருந்து, ஜனாதிபதியாக இருப்பவர்கள் தங்குகின்றனர்.
அருமையான கலை அம்சங்களுடன் உருவாகியுள்ள எலிசீ பேலஸ், பார்ப்பவர்கள் பிரமிக்கும் அழகும், பிரம்மாண்டமும் கொண்டது.
இங்கு, தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில் சுவர் வண்ணங்கள், சோபா, நாற்காலிகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கலைநயமிக்க ஓவியங்கள், சிற்பங்கள், சரவிளக்குகள், விலை உயர்ந்த தரை விரிப்புகள், திரைச்சீலைகள் என்று எலிசீ மாளிகையில் திரும்பிய பக்கமெல்லாம் திகைப்பூட்டும் அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.
பிரான்ஸ் ஜனாதிபதியின் பிரமிப்பூட்டும் மாளிகை.....
Reviewed by Author
on
June 04, 2017
Rating:

No comments:
Post a Comment