அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு!உலக நாடுகள் மகிழ்ச்சியாக இருங்கள் என புடின் பேச்சு....
பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதா வேண்டாமா என்ற குழப்பநிலையிலேயே தற்போதைய ஜனாதிபதியான டிரம்ப் இருந்து வந்தார்.
இதனையடுத்து, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்ததை விட்டு அமெரிக்கா வெளியேறுவதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.இந்த முடிவுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறுகையில் கவலைப்பட வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள்.
பருவநிலை மாற்ற ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக 2021-ஆம் ஆண்டு வரை அமலுக்கு வராது, புவி வெப்பமயமாதலை தடுக்க ஆக்கப்பூர்வமான தீர்வு காண அவகாசம் இருக்கிறது என உலகநாடுகளுக்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு!உலக நாடுகள் மகிழ்ச்சியாக இருங்கள் என புடின் பேச்சு....
Reviewed by Author
on
June 04, 2017
Rating:

No comments:
Post a Comment