அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் குப்பைகளினால் ஏற்படபோகும் ஆபத்து…...!!!


மன்னார் மாவட்டத்தில் குப்பைகளினால் ஏற்படப்போகும் ஆபத்தானது மக்களுக்கு புரியவில்லை காரணம் அங்கும் இங்குமாக கிடக்கின்ற குப்பைகளை மன்னார் நகரசபையானது துப்பரவுப்பணியாளர்கள் மூலம் துப்பரவு செய்து வருகின்றது யாவரும் அறிந்ததே…

தற்போது மன்னார் நகரசபையானது பெரும்கழிவுகளான தென்னை ஓலைகள் வாழைகள் இன்னும் சில மரங்களை அள்ளாமல் செல்வதாகவும் இதனால் பாதைகள் துப்பரவின்றி இருப்பதாகவும் மக்கள் நியூமன்னார் இணையத்திற்கு முறைப்பாடு செய்தனர்.

இவ்முறைப்பாடு சம்மந்தமாக மன்னார் நகரசபைச்செயலாளர்  X.L.பிறிட்டோ அவர்களிடம் வினாவியபோது….

ஆம் இது உண்மைதான்.... மன்னார் நகரசபை ஒழுங்கின் படி வீட்டுக்கழிவுகள் ஆதாவது சமையல்கழிவுகளைத்தான் அள்ளவேண்டும் ஆனாலும் நகரத்தின் சுத்தம் கருதி எல்லாவகையான கழிவுகளையும் அள்ளி வந்தோம்  இப்படியாக அள்ளுகின்ற கழிவுகளை மன்னார் பொதுசேமக்காளையின் பின்பக்கமாக கொட்டி தரம்பிரித்து பின்னர் தீவைப்பது வழக்கம் தற்போது தீவைப்பதினாலும் ஏற்படுகின்ற பெரும்புகை மூட்டத்தினால்  அருகில் உள்ள மக்கள் பாதிக்க்படுவதாக ஏற்பட்ட பிரச்சினையினால் சட்டச்சிக்கல் தோன்றியுள்ளது.

நீண்டகாலமாக மன்னார் நகரசபையானது குப்பைகொட்டுவதற்கான காணிகளை பெற்றுத்தருமாறு சம்மந்தப்பட்டவர்களை கேட்டிருந்த போதும் இதுவரை எந்தப்பகுதியிலும் காணிதரப்படவில்லை ஆதலால் இருக்கும் இடத்தில் தான் குப்பபைகள் கொட்டவேண்டியுள்ளது. அந்த இடத்திலும் தற்போது குப்பைநிரம்பியுள்ளது ஆதலால் தீவைத்து முற்றுமுழுதாக எரித்தால் குறைந்தது ஒருவருடத்திற்கு மீண்டும் குப்பைகொட்டலாம் அதுவும் தற்போது சட்டப்பிரச்சினையாக உள்ளதால் நிலமை மாறிப்போயுள்ளது .தற்போது இருக்கும் இடத்தில் குறைந்தது 06மாதங்கள் தான் குப்பைகளைக்கொட்டலாம்…

அதுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 06 ரக்ரர் மூலம் 40 பெட்டிக்குப்பைகள் கொட்டப்படுகின்றது. என்றால் கொஞ்சம் கணக்கிட்டுப்பாருங்கள்.

  • குப்பை கொட்டுவதற்கு இடமும் இல்லை....
  • குப்பைகளை எரிக்கவும் முடியாத நிலை.....
  • குப்பைகள் அள்ளவும் வேண்டும்…....
  • என்றால் என்ன செய்யமுடியும் அதனால் தான் முக்கியமாக சமையல் கழிவுகளை மட்டும் அள்ளுவதற்கு எண்ணியுள்ளோம் அதற்கும் 06 மாதத்திற்கு பின்பு கொட்ட இடம் இல்லை
கழிவுகளின் தாக்கம் அதிகரிப்பு...ஆகவே மக்களாகிய நீங்கள் ஓலைகள் வாழைகள் மற்றும் ஏனையசிறுமரங்களை  அயலவர்களுக்கு பிரச்சினையில்லமல் எரிக்ககூடியதை எரித்தும் புதைக்ககூடியதை புதைத்தும் குப்பைகளைக்குறைத்துக்கொண்டால் மிகவும் நல்லது.

உங்களது வீடுகளும் பாதைகளும் ஏன் மன்னார் நகரமும் சுத்தமாக இருக்கும் இல்லையேல் மன்;னார் நகரமானது அசுத்தமான நாற்றமடிக்ககூடிய நிலைக்கு தள்ளப்படும்…
சுகாதாரம் பாதிக்கப்பட்டால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.....
மிகவிரைவில் குப்பைகள் கொட்டுவதற்கான காணியினையும் ஏனைய மாற்றுமுறையினையும் கையாளவேண்டிய சூழலில் உள்ளோம். அதுவரை மக்கள் நீங்கள் தான் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.



 
-VMK-
மன்னார் மாவட்டத்தில் குப்பைகளினால் ஏற்படபோகும் ஆபத்து…...!!! Reviewed by Author on June 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.