அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போனோரை படையினர் கொன்றிருப்பர்! - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா....


தமிழர் தாயகப் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்ற பெற்றோர், அந்த இரகசிய இடம் தொடர் பில் தெரிவிக்கப்படும் தகவலை ஜனாதிபதியிடம் வழங்குவதாக குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, காணாமல் போனவர்களை இராணுவத்தினர் பொறுப்பேற்றிருந்தால் அப்போதைய சூழலில் அவர்களை கொன்றிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு கோரி அவர்களது பெற்றோர் கிளிநொச்சியில் 100வது நாளாக நேற்று முன்தினம் பாரிய போராட்டத்தை நடத்தியிருக்கும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி இந்த தகவலை சர்வதேச ஊடகமொன்றுடன் நடத்திய விசேட நேர்காணலின்போது வெளி யிட்டார்.

திருகோணமலை-மூதூர் பகுதிக்கு அண்மையில் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் மத்தியில் உரையாற்றியபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இன்னும் குறிப்பிட்ட இடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற பெற்றோரை அந்த இடத்திற்குச் சென்று ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

குறித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோருடன் தானும் அவ்விடத்திற்குச் சென்று ஆராய்ந்து பார்ப்பதற்குத் தயார் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.இந்த நிலையில் தேசிய நல்லிணக்கச் செயலணியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க, சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்று நேர்காணலை வழங்கினார்.

அதில் சந்திரிகா குமாரதுங்க குறிப்பிடுகையில்,

அவர்களுடைய பிள்ளைகளும், கணவன்மார்களும் இராணுவத்தினரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அப்படி அவர்கள் இருந்தால் தயவு செய்து அதனை தெரிவியுங்கள், அவ்வாறு தெரிவிக்கும் இடங்களுக்கு அவர்களைக் கூட்டிச்செல்ல தானும் வரத்தயார் என்பதை அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோது ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

விசாரணை நடத்தி தேடுவதற்கும் பெற்றோருக்கு சந்தர்ப்பத்தை அளிக்கவும் தயார் என்றும் அவர் கூறியிருந்தார். எனவே அந்த இடத்தில் அமர்ந்திருப்பதை விடவும் குறித்த இடங்களுக்குச் சென்று ஆராய்வதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது என பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதனை மற்றவர்கள் கூறுவதற்கு பயப்படுகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே உயிருடன் இருக்கி ன்றார்களா அல்லது உயிரிழந்துவிட்டார்களா என்பதை தேடிப்பார்க்க வேண்டும். எனக்குத் தெரிந்த வகையில் அப்படி யாரையும் முகாம்களில் மறைத்து வைக்கவில்லை.

அப்போது ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்த இராணுவத்தின் பழக்கத்திற்கேற்ப அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம். அது எனக்குத் தெரியாது. ஆனால் அப்போது அவர்களை பொறுப்பேற்றிருந்தால் யாரையும் கொலை செய்வார்களே அன்றி, இவ்வளவு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தயா ரென்றால், ஜனாதிபதியும் அதற்கு இணங்கினால் நானும் இதற்கு உதவிபுரிவேன். ஜனாதிபதி அப்படியான அறிவிப்பொன்றை விடுத்தார். அதற்குப் பின்னர் இதுகுறித்து நான் அவரிடம் வினவவில்லை. ஆனாலும் ஜனாதிபதி பொய்யை கூறவில்லை. ஜனாதிபதி உண்மையாகவே அதனை தெரிவித்தார்.

இருந்த போதிலும் முடியாது என்று ஜனாதிபதி தெரிவிக்காத பட்சத்தில் அவர்கள் தயாரென்றால் அவர்களை எந்த இடத்திற்கும் அழைத்துச்செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென அவர்கள் கோரினால் அவர்களை நாங்கள் அழைத்துச்செல்வோம். எனது கருத்தை நான் உண்மையாக கூறுகிறேன்.

அதனை தெரிவிக்க அநேக சிங்களவர்களுக்கு அச்சம் உள்ளது. அவர்கள் இன்னும் உயிருடன் இல்லை. உண்மையை சொல்ல வேண்டும். யுத்தநேரத்தில் இவர்களை அழைத்து, இற்றைக்கு 9 வருடங்களாக அவர்களை வைத்துக்கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்றார்.

அப்படியென்றால் அரசாங்கம் நேர்மையாக உள்ளது என நினைத்தால் இவர்கள் உள்ளனர் என்றும் இவர்கள் இல்லை என்றும் பட்டியலிட்டு வெளியிடலாம்தானே? என்று செய்தியாளரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அரசாங்கத்திற்கு அதனை கூறமுடியாது. இராணுவமே அதனை அறிவிக்கவேண்டும். அவர்களே இல்லை என்று கூறுகின்றனர்.

இந்த அரசாங்கத்திற்கு அதனைக்கூற முடியாது. ஆனால் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தெரிவிக்கமுடியும். எனவேதான் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைத்து அவர்க@டாக யார் காணாமல் போனவர்கள் என்பதை ஆராய வேண்டும்.

ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 3 ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. எல். எல்.ஆர்.சி, பரணகம ஆணைக்குழு, உடலாகம ஆணைக்குழு என்பன அமைக்கப்பட்டன. அவர்களும் பல பட்டியல்களைத் தயாரித்துள்ளனர்.

எனினும் இந்தப் பட்டியர்கள் முழுமைப்பெறவில்லை என்று தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். அதனால்தான் இந்த அலுவலகத்தை அமைப்பதாக சர்வதேச சமூகத்திற்கு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டது.

அந்த பட்டியலையும் பெற்று இன்னும் சிலர் இருந்தால் அவர்களையும் உள்ளடக்கி முழுமைப்படுத்தி விசாரணை செய்து, கருத்துக்களை தெரிவிக்க மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, காணாமல்போனோர் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை தயாரித்து அதற்கும் முன்னர் நட்டஈடு தொடர்பிலும் தயாரிக்க வேண்டும்.

அதனை செய்த இராணுவச் சிப்பாய்களை இழுத்துச்சென்று கொல்வதைப் பார்க்கிலும் அவர்கள் வாழ்வதே முக்கியமாகும். அவர்கள் வாழ்வதற்குத் தேவையான வசதிகளை செய்வதோடு பாரிய குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கே அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

முதலாவது பட்டியல் செய்து அதன் பின்னர் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுத்து அதன் பிறகு உண்மையைக் கண்டறியும் பொறிமுறை அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று சந்திரிகா தனது நேர்காணலில் குறிப்பிட்டார்

- Valampuri-


காணாமல் போனோரை படையினர் கொன்றிருப்பர்! - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா.... Reviewed by Author on June 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.