முரளிதரனை கௌரவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.....
இலங்கையின் சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனை கெளரவித்து சிறப்பு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கிண்ணம் லீக் ஆட்டத்தின் இடைவேளையின்போது ஐ.சி.சியின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் குறித்த நிகழ்வினை தலைமை தாங்கி நடத்தினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் Hall of Fame வரிசையில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்ட இந்த சிறப்பு நிகழ்வில், நன்றி தெரிவித்து பேசிய முரளிதரன், தமது வாழ்க்கையில் இது மறக்க முடியாத தருணம் என்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் குவித்துள்ள முரளிதரன், ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் அள்ளி 67 முறை சாதனை படைத்துள்ளார்.
மட்டுமின்றி ஒரு இன்னிங்க்சில் 10 விக்கெட்டுகளையும் சாய்த்து 22 முறை சாதித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 350 போட்டிகளில் 534 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளிதரனை கௌரவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.....
Reviewed by Author
on
June 09, 2017
Rating:

No comments:
Post a Comment