நோவ ஸ்கோசியாவில் மீண்டும் லிபரல் ஆட்சி....
நோவ ஸ்கோசிய வாக்காளர்கள் முதல்வர் Stephen McNeil மீண்டும் ஆட்சி அமைக்க மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர்.
இது ஒரு பெரும்பான்மை அரசாங்கமா அல்லது குறைவான பெரும்பான்மை அரசாங்கமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.
வாக்கு சாவடிகள் மூடப்பட்டு இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் 23 இடங்களை பெற்று லிபரல் முன்னணியில் நின்றது. ரொறிஸ் 19 தொகுதிகளையும் என்டிபி ஒன்பது இடங்களையும் பெற்றிருந்தது.
பெரும்பான்மை அரசாங்கம் ஒன்றை அமைக்க 26 ஆசனங்களை பெற்றிருக்க வேண்டும். மாகாணத்தின் நெருக்கடியான போட்டியாக அமைந்துள்ளது. கன்சவேட்டிவ் நெருக்கமாக நின்றுள்ளது.
வாக்காளர்கள் சுகாதார பராமரிப்பு குறித்து லிபரலிற்கு செய்தி ஒன்றை இத்தேர்தல் மூலம் அனுப்பியுள்ளது. நோவ ஸ்கோசிய மக்களிற்கு சுகாதார பராமரிப்பு ஒரு பெரிய பிரச்சனையாகும்.
நோவ ஸ்கோசியாவில் மீண்டும் லிபரல் ஆட்சி....
Reviewed by Author
on
June 01, 2017
Rating:

No comments:
Post a Comment