மன்னார் நகர சபை வரியிருப்பாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
மன்னார் நகர சபை வரியிருப்பாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
மன்னார் நகர சபைக்குட்பட்ட இடங்களில் அரச விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் கடந்த 1989ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆதனவரி மதிப்பீட்டின் பிரகாரம் தங்களுக்கு சொந்தமான
- வீடுகள்
- காணிகள்
- வியாபார நிலையங்கள்
இந்நிலையில் தற்பொழுது 27 வருடங்களின் பின்னர் மீண்டும் 2016ம் ஆண்டு ஆதனவரியானது மீளவும் விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் புதிதாக மீள்மதிப்பீடு செய்யப்பட்டதன் காரணமாக தங்களுடைய ஆதனங்களுக்கு சமகால பெறுமதி அடிப்படையில் கூடிய பெறுமதி மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் வரியிருப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சபையினால் அறவிடப்படும் அதனவரி தொகையானது.
வருட மதிப்பீட்டு தொகையில் 6% ஆக குறைத்து அறவிடுவதற்கு தீர்மானித்து அமைச்சின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
எனவே ஆதனவரி தொகையானது முன்பு அறவிடப்பட்ட தொகையை விடவும் சற்று அதிகரித்து காணப்படுவதற்கான காரணம் தங்களுடைய சொத்துகளின் மதிப்பு அதிகரித்துள்ளதேயாகும். எனவே பொது மக்கள் நகர சபையின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு மீள் மதிப்பீடு செய்யப்பட்ட ஆதனவரியினை எமது அலுவலகத்திலோ..... அல்லது தங்களுடைய வீடு தேடி வரும் வரி சேகரிப்பாளர்களிடமோ....... செலுத்துமாறு தயவாக கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
குறிப்பு - இது தொடர்பான மேலதிக விபரங்கள் தேவைப்படின் மன்னார் நகர சபை செயலாளருடன்.
0232222591-என்ற அலுவலக இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
X.L.பிறிட்டோ
செயலாளர்
நகர சபை.
மன்னார்
மன்னார் நகர சபை வரியிருப்பாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
Reviewed by Author
on
June 03, 2017
Rating:

No comments:
Post a Comment