யாழில் வானில் இருந்து வீழ்ந்த மர்மப்பொருள்! 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி....
யாழில் வானத்தில் இருந்து வீழ்ந்த ஒருவகையான திரவம் காரணமாக 18 மாணவிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் 18 பேரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையில் காலையில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போது, குறித்த மஞ்சள் நிறத்திலான திரவம் மாணவர்களின் மீது வீழ்ந்துள்ளது.
இதன் போது மயக்கமடைந்த மாணவி ஒருவரும் ஆசிரியர் ஒருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், குறித்த இருவருடன், மேலும் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வானில் இருந்து வீழ்ந்த திரவம் உடலில் பட்டதும் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நிலத்தில் வீழ்ந்த திரவத்தினை தடவியல் நிபுணர்கள் எடுத்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழில் வானில் இருந்து வீழ்ந்த மர்மப்பொருள்! 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி....
Reviewed by Author
on
July 21, 2017
Rating:

No comments:
Post a Comment