அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் இளைஞர் யுவதிகளிடம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முக்கிய வேண்டுகோள்....


தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை செலுத்தினால்தான் பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முதலமைச்சர் செயலகத்தில் இன்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,


பொலிஸ் சேவைக்காக 500 விண்ணப்பங்கள் உள்ளன. அவற்றில் இணைந்து கொள்வதற்கு எமது தமிழ் இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், மணற்காட்டில் சட்டவிரோதமணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர் மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டன.

இதன்போது, பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் யுவதிகளின் ஆளணிப் பற்றாக்குறையாக உள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா கூறியுள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் பொலிஸார் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட வேண்டும். பொலிஸ் சேவையில் இணைவதற்கு தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வரவில்லை.

பொலிஸ் சேவையில் தெற்கில் உள்ளவர்களை அனுமதிப்பதனால், பாதிப்பு எமக்கு தான். இதுவரை காலமும் பொலிஸ் மீதான அபிப்பிராயம் தவறாக இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போது, பொலிஸ் அதிகாரம் எமது கையில் வர வேண்டுமென்றால், தமிழ் இளைஞர்கள் பொலிஸ் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ளும் இடத்தில் இருக்க வேண்டும்.

தமிழ் பொலிஸாரின் எண்ணிக்கைகளை கூட்டினால், இங்குள்ள சிங்கள பொலிஸாரின் எண்ணிக்கையினை குறைக்க முடியும்.

எமது எண்ணிக்கையினை அதிகரித்தால், எமது ஆதிக்கத்தினை செலுத்த முடியுமென எமது இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

தற்போது 500 விண்ணப்பங்கள் இருப்பதாகவும், அந்த விண்ணப்பப்படிவங்களை வைத்து பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை எமது இளைஞர் மற்றும் யுவதிகள் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, வேலையற்ற பட்டதாரிகள் கூட உயர் பதவிகளை வகிப்பதற்காக முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளதுடன், இந்த விண்ணப்பங்களை பூரணப்படுத்த முன்வர வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழ் இளைஞர் யுவதிகளிடம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முக்கிய வேண்டுகோள்.... Reviewed by Author on July 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.