99 ஆண்டுகளின் பின்னர் வானில் நிகழும் அதிசயம்!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்ற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
99 ஆண்டுகளுக்க பின்னர் வானில் தோன்றும் முழு சூரிய கிரகணம் இதுவாகும்.
இந்த நிலையில் சூரிய கிரகணம் தொடர்பில் நாசா பொதுமக்களுக்கு சில அறிவுரைகளையும் கூறியுள்ளது.
இது தொடர்பில் நாசா தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சூரிய கிரகணம் நிகழும் போது சூரியனின் விளிம்புகள் மட்டுமே தென்படும்.இதனை மக்கள் வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது.
பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளால் மட்டுமே அவதானிக்க வேண்டும்.
சூரியனின் மைய பகுதியை முழுமையாக சந்திரன் மறைத்து விடும்.
மேலும், சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் கிரகணத்தை பார்க்க முடியும் என நாசா குறிப்பிட்டுள்ளது.
99 ஆண்டுகளின் பின்னர் வானில் நிகழும் அதிசயம்!
Reviewed by Author
on
July 23, 2017
Rating:

No comments:
Post a Comment