மன்னார் தலைமை பொலிஸ் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு
மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தில் சிறுகுற்றப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சன தெரிவித்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டினை பொதுமக்கள் சிலர் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தில் சிறுகுற்ற பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் சிலர் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும், பொய்யான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்களின் விசாரணைகள் நேர்மையான முறையில் அமைந்திருக்கவில்லை எனவும், இதன் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதியைப் பெற்றுத்தருமாறு கோரியே வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் நேற்று (13) பொதுமக்கள் சிலர் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளரால், 14 நாட்களுக்குள் தமக்கு பதில் வழங்குமாறு தெரிவித்து கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
குறித்த முறைப்பாட்டினை பொதுமக்கள் சிலர் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன், அவர்களின் விசாரணைகள் நேர்மையான முறையில் அமைந்திருக்கவில்லை எனவும், இதன் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நீதியைப் பெற்றுத்தருமாறு கோரியே வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் நேற்று (13) பொதுமக்கள் சிலர் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளரால், 14 நாட்களுக்குள் தமக்கு பதில் வழங்குமாறு தெரிவித்து கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
மன்னார் தலைமை பொலிஸ் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடு
Reviewed by NEWMANNAR
on
July 14, 2017
Rating:

No comments:
Post a Comment