அன்பகம் சிறுவர் காப்பகத்தில் 11 வயது சிறுமி சடலமாக மீட்பு: விசாரணைகள் தீவிரம்
வவுனியாவில் சிறுவர் காப்பகமான அன்பகம் மீது ஊடகங்கள் அவதூறு பரப்புவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள சிறுவர் காப்பகமான அன்பகத்தில் கடந்த 29-06-2017 அன்று 11 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அன்பகத்தின் நிர்வாகியான சாமி அம்மா என்று அழைக்கப்படும் கு.ஜெயராணி தொடர்பாக ஊடகங்களில் பிழையான செய்திகள் வெளிவருவதாக தெரிவித்தே ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது வவுனியா மன்னார் வீதியில் அமைந்திருக்கும் அன்பகத்திலிருந்து மன்னார் வீதிவழியாக ஊர்வலமாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அரசாங்க அதிபரிடம் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து மகஜரை பெற்றுக்கொண்ட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார கருத்து தெரிவிகையில்,
அன்பகத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அத்துடன் மாவட்ட செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் தனியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணையின் பின் அன்பகம் சிறுவர் இல்லம் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.
அன்பகம் சிறுவர் காப்பகத்தில் 11 வயது சிறுமி சடலமாக மீட்பு: விசாரணைகள் தீவிரம்
Reviewed by Author
on
July 11, 2017
Rating:

No comments:
Post a Comment