மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்-(photos)
மன்னாரிற்கு இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார மன்னார் மாவட்ட விவசாயிகளுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
மன்னார் முருங்கன் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்தில் இடம் பெற்ற விவசாயிகளுடனான விசேட சந்திப்பின் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் எந்திரி எம்.துரைசிங்கம், மேலதிக நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் எந்திரி அல்வீஸ்,மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி குமார தேவன் உற்பட விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள்,விவசாயிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது விவசாயிகள் எதிர் நேக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதோடு,முருங்கன் நீர்ப்பாசன அலுவலகத்திற்கு சென்றால் அதிகாரிகள் அதிகார துஸ்பிரையோகத்தில் ஈடுபடுகின்றமை குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதே வேளை முருங்கன் கட்டுக்கரைக் குள திட்ட விவசாய அமைப்புக்களின் சமாசத்தினால் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
குறிப்பாக கட்டுக்கரைக் குளத்தின் கீழ் 32 ஆயிரம் ஏக்கர் வரையான விஸ்தீரணத்தில் பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
எனினும் குளத்தினதும், வாய்க்கால்களினதும், கொள்ளளவும், நிரந்தரமான கட்டுமானப்பணிகளும் திருப்திகரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், விவசாயிகளினது வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும் பொருட்டு முக்கியமான சில வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
குறித்த கோரிக்கைகளில் கட்டுக்கரை களத்தின் வான் '2' உயர்த்தப்படுதல் வேண்டும்.இதன் மூலம் குளத்தின் தண்ணீர் கொள்ளளவானது அதிகரிக்கப்படும்.கட்டுக்கரை குளத்திற்கு தண்ணீர் வரும் உள்ளீட்டு வாய்க்கால் 18 கிலோ மீற்றர் நீளத்திற்கு அகலமாக்கப்படுதல் வேண்டும்.இதனால் தண்ணீர் விரயமின்றி விரைவாக குளத்தை வந்தடையும்.
மேலும் கட்டுக்கரை குளத்தின் பிரதான வாய்க்கால்கள் அனைத்திற்கும் இரு பக்கமும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட வேண்டும்.கட்டுக்கரை குளத்தின் கீழ் வரும் வாய்க்கால்கள்,ஊட்டற் குளங்களுக்கான கட்டுமான வேலைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.கட்டுக்கரை குளத்தின் கொள்ளளவை பௌதீக ரீதியாக அதிகரிக்கும் வகையில் கட்டுக்கரை குளத்தினுள் இருந்து மண் அகற்றப்பட வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைளை முருங்கன் கட்டுக்கரைக் குள திட்ட விவசாய அமைப்புக்களின் சமாசம் நீர் வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார , வன்னி மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு வந்ததோடு மகஜரையும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்-(photos)
Reviewed by NEWMANNAR
on
July 11, 2017
Rating:
No comments:
Post a Comment