முல்லைத்தீவு பாடசாலையில் வெடிப்பு: எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெடிப்பு சம்பவத்தினால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், 6 மாணவிகளும் 2 மாணவர்களும் மயக்கமடைந்துள்ளனர்.
மயக்கமடைந்த மாணவர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை வளவினுள் உள்ள குப்பை மேடு ஒன்றுக்கு நெருப்பு வைத்த சந்தர்ப்பத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
மீன்களை பிடிக்க பயன்படுத்தப்படும் “டைனமைட்” ரக வெடிபொருளே வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த வெடிப்பு சம்பவத்தினால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், 6 மாணவிகளும் 2 மாணவர்களும் மயக்கமடைந்துள்ளனர்.
மயக்கமடைந்த மாணவர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை வளவினுள் உள்ள குப்பை மேடு ஒன்றுக்கு நெருப்பு வைத்த சந்தர்ப்பத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

முல்லைத்தீவு பாடசாலையில் வெடிப்பு: எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by NEWMANNAR
on
July 18, 2017
Rating:

No comments:
Post a Comment