கிளிநொச்சியில் பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினர் போராட்டம்....
கிளிநொச்சி பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் மற்றும் அங்கத்தவர்கள் இணைந்து இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்திக்கருகில் அமைந்துள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டு காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமது சங்க அங்கத்தவர்களின் விபத்து, நிதி, ஓய்வூதியம், மற்றும் பணியாளர்களின் நல நிதி போன்றவற்றை பேரிணையத்திடம் இருந்து மீள பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தமது கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்படும் வரை நாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தினர் போராட்டம்....
Reviewed by Author
on
July 10, 2017
Rating:

No comments:
Post a Comment