வடமாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை?
ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்த தடை செய்யப்படும் என்று வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற வவுனியா, தோணிக்கல், முத்து மாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
அதில் கலந்து கொண்டிருந்த வடமாகாண முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் வட மாகாண சபையிலே ஒரு நியதி சட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்.
அச்சட்டம் வெகு விரைவில் நடைமுறைக்கு வரும் போது முற்று முழுதாக ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடைபெறுவதை நிறுத்தி உங்களுக்கான ஒத்துழைப்பபை வழங்குவதாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக புதிய கல்வி அமைச்சரிடமும் நான் நினைவுபடுத்தியிருந்தேன். அதன் பயனாக இன்னும் இரண்டு மாதங்களில் வடமாகாணம் முழுவதும் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை?
Reviewed by Author
on
July 10, 2017
Rating:

No comments:
Post a Comment