அண்மைய செய்திகள்

recent
-

புதிய அரசியல் அமைப்பினை தயாரித்தல்' தொடர்பில் மன்னார் மக்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு.

மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்புடனும்,ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் திட்ட அமுலாக்கத்திற்கு அமைவாக 'புதிய அரசியல் அமைப்பினை தயாரித்தல்' தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டும் கருத்தமர்வு இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

இதன் போது புதிய அரசியல் அமைப்பினை தயாரித்தல் தொடர்பில் மக்களுக்கு தெழிவூட்டும் விரிவுகளை இடம் பெற்றது.

-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை தலைவர் ஜே.ஜே.கெனடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் புதிய அரசியல் அமைப்பினை தயாரித்தல் தொடர்பில் பி.ஓ.பி அமைப்பின் இணைப்பாளர் எஸ்.வின்சன் பத்திரன,சிரேஸ்ட விரிவுரையாளரும், சட்டத்தரணியுமான திருமதி கொசலை மதன், விரிவுரையாளர் நவரத்தினம் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கினர்.

இதன் போது கிராம மட்டத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள்,அரச சார்பற்ற மமைப்புக்களின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொணடமை





புதிய அரசியல் அமைப்பினை தயாரித்தல்' தொடர்பில் மன்னார் மக்களுக்கு அறிவூட்டும் செயலமர்வு. Reviewed by NEWMANNAR on July 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.