அண்மைய செய்திகள்

recent
-

சுற்றாடல் தேசிய வேலைத்திட்டத்தின் கிழ் முசலி பிரதேச செயலகம் சிரமதானம் -Photos

 ஜனாதிபதியின் சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கிழ் முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தலைமையில் இன்று காலை 9மணிக்கு மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பொது சிரமதானம் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.


இன் நிகழ்வில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்;

தற்போதைய நிலையில் சில மாவட்டங்களில் டெங்கு காச்சல் போன்ற பல வகையான நோய்கள் ஏற்பட்டு இருக்கின்றது, அதே போன்று பல உயிர்கள் கூட கடந்த காலத்தில் இறந்து இருக்கின்றது,எனவே நாங்கள் வேலை செய்யும் அலுவலகத்தை சுத்தமாகவும்,நோய்கள் அற்ற பகுதியாகவும் பாராமரிக்க வேண்டிய தேவைப்பாடுகள் எமக்கு இருக்கின்றது,எனவும் சிரமதானம் தொடர்பாக நேற்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விழிப்புணர்வு கலந்துறையாடல் இடம்பெற்றது.எனவும் தெரிவித்தார்.

இது போன்று வெளிக்கள உத்தியோகத்தர்கலாக கடமையாற்றும் நிங்கள் உங்கள் கிராமத்தையும்,பொது இடங்களையும் சுத்தமாகவும்,சிரதானங்கள் செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

இன் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பொருளாதார உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள்,இன்னும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என கலந்து சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

சுற்றாடல் தேசிய வேலைத்திட்டத்தின் கிழ் முசலி பிரதேச செயலகம் சிரமதானம் -Photos Reviewed by NEWMANNAR on July 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.