திருக்கேதீஸ்வரம் கௌரியம்பாள் அ.த.க.பாடசாலை மன்னார்க்கு சூடியது வெற்றி மாலை…......
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த 10வது தடகளப்போட்டியில் மன்னார் திருக்கேதீஸ்வர கௌரியம்பாள் அ.த.க.பாடசாலையானது தனக்கான தனிமுத்திரையை பதித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
மூன்று தங்கம் ஒரு வெள்ளி இரண்டு வர்ணச்சான்றிதழ் இரண்டு வெற்றிக்கிண்ணங்கள் பெற்றுள்ளனர் ஏன் இந்தக்கணக்கு……என்று சிந்திப்பீர்கள் காரணம் உள்ளது.
- மைதானமே இல்லை……
- விளையாட்டு உபகரணங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை
- பயிற்சி ஆசிரியர் ஒருவரே
- போதிய வசதிகள் எதுவுமே இல்லை
- ஊக்கப்படுத்தவோ உற்சாகப்படுத்தவோ மக்கள் பலம் இல்லை
கடந்த2015ம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் 10 மாணவர்கள் பரிட்சை எழுதி 7 பல்கலைக்கழகம் சென்றுள்ளனர் அதில் 04மாணவர்கள் யாழ்பல்கலைக்கழகமும் 03மாணவர்கள் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சென்றுள்ளனர் 14 ஆண்டுகளுக்கு பிறகு புலைமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர் அத்தோடு 2014-2017 07 மாணவர்கள் தேசிய ரீதியில் சாதனைபடைத்துள்ளார்கள்.
மன்னாரில் நகரப்பகுதியில் உள்ள தேசிய பாடசாலைகள் என்ன செய்கின்றன….மேலே குறிப்பிட்ட எல்லா வசதிகளும் மேல்மிச்சமாக தேவைக்கதிகமாக இருக்கின்றபோதும் (மாணவமாணவிகள் பயிற்சி ஆசிரியர்கள் சிறந்த 400மீட்டர் பரப்பளவுடைய விளையாட்டு மைதானம் சகல விதமான விளையாட்டு உபகரணங்கள் பழைய மாணவர்களின் பொதுஅமைப்புக்களின் நலன்விரும்பிகளின் பொதுமக்களின் உதவிகள் சலுகைகள் ஆலோசனைகள் கிடைக்கின்றது) இருந்தும் விளையாட்டாக இருந்தாலும் சரி சாதாரணதரப்பரீட்சையாக இருந்தாலும் சரி உயர்தரம் புலமைப்பரீடசையாக இருந்தாலும் சரி சாதிக்க தவறிவிடுகின்றனர்…..
ஏன் என்ன காரணம்…….
கல்லும் முள்ளும் பாதைகளிலும் பாலாவிக்கரைத்திடலில் ஓடிப்பயிற்சி எடுத்தே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளனர் அந்த வீராங்கனைகளில் விபரம் இதோ........
சௌந்தர்ராஜா பிரியதர்சினி
20வயது பிரிவின் கீழ்
- 100ஆ-1ம் இடம் தங்கம்
- 200ஆ-1ம் இடம் தங்கம்
- நீளம் பாய்தல் 1ம் இடம் தங்கம்
சௌந்தர்ராஜா தேனுஷா
18வயது பிரிவில்
முப்பாச்சல் 2ம் இடம் வெள்ளி 10.30 பாய்ந்து வர்ணச்சான்றிதழையும
நீளம் பாய்தலில் 5ம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
அஞ்சலோட்டம் 6வது இடம் 4*400
- சௌ.பிரியதர்சினி
- தி.லோகேந்தினி
- ஸ்ரீ.சுகனியா
- நூ.சுபாசினி
- சே.விழியரசி
- இ.சீதாலட்சுமி
எமக்கு விளையாட்டுத்துறை சம்மந்தமாக பிரதான விடையமாக இருப்பது மைதானமே அந்த மைதானமும்(பாடசாலைக்குமேற்கே ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதியானது பற்றைக்காடாகவும் சமமற்றநிலப்பகுதியாகவும் உள்ளது அதற்கான துப்பரவு மற்றும் சமப்படுத்தல் புணரமைப்பு போன்ற பணிகளை மன்னார் மாவட்டச்செயலகம் நிதிப்பங்களிப்போடு செய்து தருவதாக கூறியுள்ளார்கள் அவ்அபிவிருத்தி 2018 முடிவடையும் எனநம்புகின்றேன்) அவ்வாறு 400ஆ மைதானமும தரமான விளையாட்டு உபகரணங்களும் முறையான பயிற்சியும் எமது திறமையான மாணவர்களுக்கு கிடைக்குமானால் நிச்சயமாக எமது பாடசாலை மன்னார் மாவட்டத்திற்கு இன்னும் அதிகூடிய புள்ளிகளையும் பதக்கங்களையும் கிண்ணங்களையும் பெற்றுத்தரும் என்பதில் ஜயம் இல்லை…
இம்முறை வடமாகாணத்தில் 2ம் இடத்தினைப்பெற்ற எமது மன்னார்க்கும்(601) முதலாம் இடம் பெற்ற யாழ்பாணத்திற்கும(650); வெறும் 49புள்ளிகள் மாத்திரமே.
எமது மன்னார் மாவட்டமானது அஞ்சலோட்டம் மற்று கோலுன்றிப்பாய்தல் இரண்டு விளையாட்டிலும் முழுமையாக கலந்து கொள்ளுமானால் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் எமது மன்னார் மாவட்டம் தான் வடமாகாணத்தில் 1ம் இடத்தினைப்பெற்றுக்கொள்ளும் என்பது திண்ணம்
அதற்கு எமது மாவட்ட அதிகாரிகள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடிச்சிந்திப்பார்கள் ஆனால் எல்லாம் சாத்தியமே….
சாதனைபுரிந்த மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சியளைத்த ஆசிரியர்கள் அதிபர் பெற்றோர் மற்றும் பாடசாலைச்சமூகம் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டுகின்றோம்.
-வை-கஜேந்திரன்-


திருக்கேதீஸ்வரம் கௌரியம்பாள் அ.த.க.பாடசாலை மன்னார்க்கு சூடியது வெற்றி மாலை…......
Reviewed by Author
on
July 13, 2017
Rating:

No comments:
Post a Comment