மன்னார் நானாட்டான் ஊடாக முருங்கன் பிரதான வீதி புனரமைக்கப்படுமா…..???
மன்னார் நானாட்டான் ஊடாக முருங்கன் செல்லும் பிரதான விதி நீண்ட காலமாக மிகவும் மோசமாக காணப்படுகின்ற பாதையானது மக்களின் பாவனைக்கு உகந்ததாக இல்லை பலமுறை சென்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கதைத்தபோது அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை தருகின்றது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பாதையானது நானாட்டான் முருங்கன் பிரதான பாதையாகும் சுமார் 11கிராம மக்களின் பிரதான பாவனைப்பாதையாகவுள்ளது. இப்பாதையூடாகவே அரச கடமைகளை செய்வதற்கு
- பிரதேசசெயலகம்
- பிரதேச சபை
- பாடசாலைக்கும்
- வைத்தியசாலைக்கும்
- வங்கிளுக்கும் இதர அன்றாடச்செயற்பாட்டிற்கும் பயன்படுத்தகின்ற பாதையாக உள்ளது. மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு இப்பாதையை பயன்படுத்தும் போது படும் வேதனை சொல்லில் அடங்காது
கிட்டத்தட்ட 7வருடங்களுக்கு மேலாக இப்பாதை மோசமாகத்தான் உள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 2வருடங்களுக்கு முன்பு இப்பாதையை புனரமைப்பு என்னும் பேரில் பழைய கல்லுகளையும் சல்லிகளையும் போட்டு தரமற்றமுறையில் தார் ஊற்றி பாதையினை புனரமைத்தார்கள் அது நிண்டுபிடிக்கவில்லை காரணம் இப்பாதையூடாக கனரகவாகனங்களின் உழவு இயந்திரங்களின் பயணம் அதிகமாக இருந்ததால் தரமற்ற பாதை தாக்கு பிடிக்க முடியவில்லை மீண்டும் குண்டும் குழியுமாக சிதறிய சல்லிக்கல்லுகளோடு புழுதியாக காணப்படுகின்றது.
(ஏனைய பகுதிகளில் வீதிகள் புனரைமப்பு நடைபெறுகின்றது ஏன் எமது வீதி மட்டும் இப்படியே இருக்கின்றது)
இப்பாதையில் தற்போது விபத்துக்கள் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. மக்களும் சலிப்படைந்தவர்களாய் எப்போது எமக்கு தரமான பாதை வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
தரமான பாதைவருமா….
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பார்களா….???
மக்களின் வேண்டுகோள் நிறைவேறுமா…. ????
மாணவர்களினதும் மக்களினதும் நலன் கருதி மழை வருவதற்கு முன் மிகவிரைவாக செயற்படுங்கள்.......
-மன்னார்விழி-
மன்னார் நானாட்டான் ஊடாக முருங்கன் பிரதான வீதி புனரமைக்கப்படுமா…..???
Reviewed by Author
on
July 22, 2017
Rating:

No comments:
Post a Comment