மன்னார் மக்களுக்கோர் அறிவித்தல்….
மன்னார் மாவட்டத்திற்குள் மோட்டார் சைக்கிள் திருடும் இனம்தெரியாத குழு ஒன்று இறங்கியுள்ளதாக தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது 12-07-2017 காலை மன்னார் அரசபேரூந்து தரிப்பிடத்திற்குள் விடப்பட்டிருந்த பெசன் பிறோ மோட்டார் பைக் ஒன்று காணாமல் போயுள்ளது.
மோட்டார் பைக்கினை திருடி அதன் உதிரிப்பாகங்களை வேறுமாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர் ஆகவே மக்களாகிய நீங்கள் உங்களது உடமைகளையும் பொருட்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
மோட்டார்பைக்கினை கான்லொக் போடலாம் அல்லது உங்களது கண்பார்வையில் வைத்திருங்கள் உங்களுக்கு தெரிந்தமுறையில் உங்களது உடைமைகளை காத்துக்கொள்ளுங்கள்.
அதுபோல அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீட்டில் பணிநிமித்தம் வெளியில் செல்வதால் காலை 8-00 மாலை 4.30 வரையுமான நேரத்திற்குள் பகலில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மூர்வீதிப்பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த திருடர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்று எல்லாவற்றினையும் அள்ளிக்கொட்டி அவர்கள் எதிர்பார்ததது கிடைக்காததால் சிலபொருட்களை உடைத்துவிட்டுச்சென்றுள்ளனர்.
- மயக்கமருந்து பாவித்தல்
- பவுடர் தூவுதல்
- எதை கொள்ளையடிக்க வருகின்றார்கள் என்பதையே புரிந்து கொள்ளமுடியாமல் உள்ளது
அந்தக்காலம் தான் இரவினில் திருட்டு கொள்ளையில் ஈடுபடவார்கள் தற்போது பட்டப்பகலில் வெட்டவெளியில் நடக்கிறது கொள்ளை அதுவும் பகல்கொள்ளை எனவே விழிப்பாய் இருங்கள். உங்களது வாசலில் தானே வாகனம் நிற்கிறது என்று அலட்சியப்படுத்த வேண்டாம் கவனமாய் இருங்கள்….
-மன்னார்விழி-
மன்னார் மக்களுக்கோர் அறிவித்தல்….
Reviewed by Author
on
July 13, 2017
Rating:

No comments:
Post a Comment