டெனிஸ்வரன் தலைமையில் வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்....
வவுனியாவில் இளமருதங்குளம் – சமளன்குளம் வீதி புனரமைக்கும் பணி வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017ம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாவில் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரனால் தெரிவு செய்யப்பட்ட குறித்த வீதியானது 450 மீற்றர் வரை 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மாகாணசபை உறுப்பினரான செ.மயூரன், வவுனியா மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
டெனிஸ்வரன் தலைமையில் வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்....
Reviewed by Author
on
July 20, 2017
Rating:

No comments:
Post a Comment