6000 வருடங்களுக்கு முன்னர் மனிதன் இலங்கையில் வாழ்ந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிப்பு
இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதர் வாழ்ந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது புராதன வரலாற்று தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதில் 6000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் பயன்படுத்தியதாக கூறப்படும் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரத்திலுள்ள இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவினரால் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
மேலும், கற்கால வரலாறு குறித்து வவுனியாவில் முன்னெடுக்கப்படும் முதலாவது அகழ்வு இதுவென அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கும் புவிச்சரிதவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
6000 வருடங்களுக்கு முன்னர் மனிதன் இலங்கையில் வாழ்ந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிப்பு
Reviewed by Author
on
August 17, 2017
Rating:

No comments:
Post a Comment