புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றில் ஏ.ஆர்.ரகுமான்....
புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில வருடங்களாக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் குங் பூ கலையில் வல்லவரான புரூஸ் லீ-யின் வாழ்க்கை வராலாறும் படமாக எடுக்கப்படுகிறது.
ஹாலிவுட்டில் பிரபல நடிகர் புரூஸ் லீ. அவரது படங்களுக்கென்று தனி மவுசு உண்டு. அவரைப் போன்ற ஒரு வீரன், கலைஞன், நடிகன் உலகத்தில் இன்னமும் பிறக்கவில்லை. பிறக்கப் போவதும் இல்லை என்னும் அளவுக்கு தனக்கென தனி முத்திரை பதித்து இருக்கிறார் புரூஸ்லீ. அதாவது அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்நிலையில், குங்பூ கலையில் வல்லவரான புரூஸ்லியின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாக இருக்கிறது.
புரூஸ் லீ மறைந்து 44 ஆண்டுகளுக்குப் பின்னர், அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சேகர் கபூர் `லிட்டில் டிராகன்' என்ற பெயரில் இயக்க இருக்கிறார்.
இப்படத்தை புரூஸ் லீ-யின் மகளான ஷனான் லீ தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான "புரூஸ் லீ என்டர்டெயின்ட்மெண்ட்" மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றில் ஏ.ஆர்.ரகுமான்....
Reviewed by Author
on
August 17, 2017
Rating:

No comments:
Post a Comment