அம்பலமாகும் டெனிஸ்வரனின் ஊழல் !. இதோ கதிரை முறைகேடு ஆதாரம்!.. கதிரையைக்கூட விட்டுவைக்காத டெனிஸ்
வடக்கு போக்குவரத்து அமைச்சர் தனது கைகள் சுத்தமானவை என கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறிவரும் போது, அவரது அமைச்சின் கீழ் நடந்த முறைகேடு ஒன்றை வெளிச்சமிடுகிறோம்.
கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மாகாண சபை உறுப்பினர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கழங்கள், சமூக அமைப்புக்களுக்கு கதிரைகள் வழங்கப்பட்டன. மாகாண சபை உறுப்பினர் தனது நிதியில் உதவி செய்வதற்கு தெரிவு செய்ய அமைப்பின் பெயரையும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி அல்லது ஒதுக்கும் கதிரைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு வழங்குவார்கள்.
கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக அந்த அமைப்புக்களுக்கான கதிரைகள் வழங்கப்பட்டது.
இந்த திணைக்களம் டெனிஸ்வரனின் கீழ் செயற்பட்டது. இதன் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு அமைச்சர் டெனீஸ்வரனின் அமைச்சின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட கதிரைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தனர் வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலர்.
2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கதிரைகளில் கதிரை ஒன்றின் விலை 1000 ரூபாய் வீதம் மகாணசபை உறுப்பினர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அறவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த அமைச்சினால் வழங்கப்பட்ட கதிரை ஒன்றுக்கான சாதாரண சில்லறை விலை வெறும் 590 ரூபாய் மட்டுமே. அப்படி இருக்கையில் ஒரு கதிரைக்கு 410 ரூபாய் வீதம் மாகாண சபை உறுப்பினர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து அதிகமாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இந்த கதிரைகள் இன்றும் சாட்சியங்களாக இருக்கின்றன.
மாகாணசபை உறுப்பினர்கள் பலர் நூற்றுக்கணக்கான கதிரைகளை கொள்வனவும் செய்தும் இருந்தனர். சாதாரணமாக 12, 15 கதிரைகளை கொள்வனவு செய்கின்ற போதே ஒரு கதிரை அல்லது ஒரு சிறிய மேசை இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்பட்ட கதிரைகள் எவற்றுக்கும் அவை வழங்கப்படவில்லை.
வடமாகாணத்தின் ஏனைய அமைச்சுக்களின் கீழ் சில உறுப்பினர்களுக்கு இதே கதிரைகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டும் உள்ளன. ஆனால் கிராமிய அபிவிருத்தி அமைச்சில் மட்டும் கதிரைக்கான அதிக கட்டணம் அறவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 2016 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் போது வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகாராசா மாகாணசபையில் பேச இருந்த சமயத்தில், அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவரை சமரசம் செய்து தடுத்து நிறுத்தியுள்ளார். குறித்த முறைகேடு தொடர்பில் அமைச்சருக்கும், குறித்த திணைக்களத்திற்கும் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின் 2016, 2017 ஆம் ஆண்டு குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் குறித்த அமைச்சினால் வழங்கப்பட்ட கதிரைகளுக்கான விலைகள் குறைக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியாயின் முதல் நடந்த வீண்விரயத்திற்கு பொறுப்பு? அது ஊழல் இல்லையா? அதற்கு நடவடிக்கை என்ன?
2015 ஆம் ஆண்டு கிராமிய அமைச்சின் ஊடாக கதிரைகளைப் பெற்ற அனைத்து மாகாண சபை உறுப்பினர்களின் நிதிக்கும் இந்த கதிதான் நடந்திருக்கிறது.
வடக்கு கிராமிய அபிவிருத்தி அமைச்சருக்கு இந்த முறைகேடு தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை இனிமேல் வராமல் தான் பார்த்து கொள்வதாக முறைப்பாட்டாளர்களை போக்குவரத்து அமைச்சர் சமரசம் செய்துள்ளார். இந்த விவகாரத்தை வெளிக்கொணர விடாமல் அமைச்சர் எதற்காக சமரசம் செய்தார்?
இது தொடர்பில் விசாரணை இடம்பெற்று உண்மை வெளிக் கொணரப்பட வேண்டும். அமைச்சர் இதில் தொடர்புபட்டாரா அல்லது அதிகாரிகள் தொடர்புபட்டார்களா என்பது கண்டறியப்பட வேண்டும். தன் மீதான மோசடி நிரூபிக்கப்பட்டால் இரண்டு மடங்கு பணத்தை தருவதாக போக்குவரத்து அமைச்சர் கூறியிருக்கிறார். தனது அமைச்சின் கீழ் நடந்த ஒன்றிற்கு அவர் பொறுப்பாளி இல்லையா?
கதிரைக்கே இவ்வளவு மோசடி என்றால் ஏனைய விடையங்கள் சொல்லவா வேண்டும் !!
என்னும் அம்பலப்படுத்த படும் கூட இருப்பவர்களின் ஊழலும் சேர்த்து ,,,

தொடர்புடைய செய்திகள்
- முதலமைச்சர் கேட்டாலும் நான் அமைச்சிப்பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்ய தயார் இல்லை- டெனிஸ்வரன்.(photos)
- விசாரணைக்குழுவில் முன்னிலையாகமாட்டோம் – டெனீஸ்வரன், சத்தியலிங்கம்!
- பதவி எனக்கு முக்கியமல்ல: அமைச்சு பொறுப்பை தூக்கி எறியத்தயார் - டெனீஸ்வரன்
- குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இரண்டு மடங்கு பணம் தருவேன் – டெனீஸ்வரன்!
அம்பலமாகும் டெனிஸ்வரனின் ஊழல் !. இதோ கதிரை முறைகேடு ஆதாரம்!.. கதிரையைக்கூட விட்டுவைக்காத டெனிஸ்
Reviewed by NEWMANNAR
on
August 20, 2017
Rating:

No comments:
Post a Comment