அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம் பெற்ற சர்வமத உறவுப்பால நிகழ்வு-(படம்)



மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதயம் கடந்த 28 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இன்று புதன் கிழமை(30) ஆம் திகதி வரையான மூன்று நாட்களாக குருநாகல் கறிற்றாஸ்-உடன் இணைந்து சர்வமத உறவுப்பால நிகழ்வை நடாத்தியது.

20 சர்வமத உறுப்பினர்களாகிய பௌத்த மத குருக்கள், இஸ்லாமிய மௌளவிகள், கத்தோலிக்க குருக்கள், அருட் சகோதரிகள், இந்துக் குருக்கள் ஆகியோர் இதில் பங்கெடுத்தனர்.

முதலாம் நாள் வருகை தந்து மடு தேவாலயத்தில் தங்கி இருந்து மடுப்பரிபாலகர் அருட்பணி எஸ்.எமிலியானுஸ்பிள்ளை அடிகளாரை சந்தித்து நேர்முக உரையாடலை மேற்கொண்டனர்.

மடு திருத்தலத்தில் பாரம்பரிய வரலாறு, அதன் அமைவிடம், புனிதத்தன்மை பற்றி நீண்ட உரையாடலில் பங்கெடுத்து, மடுத்தேவாலயத்தின் உள்ளக வெளியக வளாகங்களையும் தரிசித்தனர்.

இரண்டாம் நாள் மன்னார் கறிற்ராஸ் - வாழ்வதய கேட்போர் கூடத்தில் இலக்கு கிராம மக்களுடன் சர்வமத பிராத்தனையில் ஈடுபட்டு, கிராமிய மக்களுடன் உரையாடி தமிழ் மொழி பண்பாடு, கலாச்சாரம் பற்றி மேலும் தெரிந்துகொண்டனர்.

அதன் பின்னர் மன்னார் மூர்வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலையும் தரிசித்து அங்கே மௌளவி ஆசீம் அவர்களோடு கலந்தரையாடலை மேற்கொண்டனர். அங்கிருந்து புறப்பட்டு திருக்கேதீஸ்வர இந்து ஆலயத்தை தரிசித்து இந்து குருக்களோடும் உரையாடல் மேற்கொண்டனர்.

மாலையில் முருங்கனில் அமைந்துள்ள பௌத்தமத விகாரையை சந்தித்து பௌத்தமத மத குருவோடும் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் மடுத்திருப்பதிக்கு திரும்பி அங்கே பல்சமய கூட்டங்களை நடாத்தி தங்களது முயற்சியின் செயற்பாட்டை மீளாய்வு செய்து இன்று புதன் கிழமை(30) மீண்டும் குருநாகல் சென்றனர்.

குறித்த சர்வ மத நல்லிணக்க குழுவின் முக்கிய நோக்கம், உறவுப்பால பரிமாற்றத்தின் வழி சமய தலைவர்களுக்கிடையே ஆழமான புரிந்துணர்வையும் நல்லுறவையும் சமய விழுமியங்களின் படி மக்கள் அனைவரும் ஒருவர் ஒருவரது சமய உரிமைகளை மதித்து அமைதிச்சூழலை நம் நாட்டில் கட்டி எழுப்புதலேயாகும்.என்பது குறிப்பிடத்தக்கது.





மன்னாரில் இடம் பெற்ற சர்வமத உறவுப்பால நிகழ்வு-(படம்) Reviewed by NEWMANNAR on August 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.