அமெரிக்க அதிகாரியுடன் தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்கள் முக்கிய பேச்சு....
இலங்கைக்கு வந்திருக்கும் அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பதில் இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வேல்ஸை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர்.
இந்தச் சந்திப்பு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் நாளைய தினம் (31) காலை இடம்பெறவுள்ளது.
மேற்படி சந்திப்பில் கலந்து கொள்ள வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நான்கு பங்காளிக் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொள்ளவுள்ளார்.
அமெரிக்க அதிகாரியுடன் தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர்கள் முக்கிய பேச்சு....
Reviewed by Author
on
August 31, 2017
Rating:

No comments:
Post a Comment