20ஆவது திருத்தம், இடைக்கால அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்க எதிர்வரும் 19இல் கூடுகிறது கூட்டமைப்பு!
20ஆவது திருத்தச்சட்டம், புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக விளக்கமளிப்பதற்கு எதிர்வரும் 19ஆம் நாள் முற்பகல் 11.00 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வருகை தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இரா.சம்பந்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், அரசியல் யாப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாகவும் புதிய அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய அரசியல் யாப்பு வரவிருக்கின்ற சூழலில் தேர்தல் சீர்திருத்தமான 20ஆவது திருத்தம்இ மற்றும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை ஆகியவை கொள்கை முடிவுடன் தொடர்புபட்டுள்ளது.
இதன்காரணமாக, நாடாளுமன்றக் கூட்டத்தை கூடுவதற்கு முன்னர், ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டி அனைத்துக் கட்சிகளினதும் கருத்தறிந்து அதன் பின் முடிவெடுப்பதே சிறந்தது எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஈபிஆர்எல்எவ் கட்சியின் நிலைப்பாடு இதுவே எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஈபிஆர்எல்எவ் கட்சியின் நிலைப்பாட்டினையே ரெலோ அமைப்பும் கொண்டுள்ளதாக அதன் தலைவர்சித்தார்த்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.
20ஆவது திருத்தம், இடைக்கால அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்க எதிர்வரும் 19இல் கூடுகிறது கூட்டமைப்பு!
Reviewed by Author
on
September 16, 2017
Rating:

No comments:
Post a Comment