கலைஞனின் அகம் கணணியில் முகம் விம்பம் பகுதியில்.....நேசம் மாஸ்ரர்.....
கலைஞனின் அகம் கணணியில் முகம் இப்பகுதியில் நம்மோடு பேசவருகின்றார் முன்பள்ளி ஆசிரியர் பிரதி அதிபர் நாடக ஆசிரியர் கல்விச்சேவையாளச் விருது பெற்ற நேசம் மாஸ்ரர் எனவும் சின்ன பச்சேக் மாஸ்ரர் என எல்லோராலும் அழைக்கப்படகின்ற (ஞானமணி செபஸ்தியாம்பிள்ளை பச்சேக்) அவர்களுடனான சந்திப்பின்போது..
நீ சிரித்துப்பார் உன் முகம் உனக்கு பிடிக்கும் மற்றவர்களை சிரிக்கவைத்துப்பார் உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும் எனும் இரகசியத்தினை தன்னிடம் கொண்டு தனது வாழ்வில் நகைச்சுவையை நாடகமாக….
தங்களைப்பற்றி----நெய்தல் நிலமாகிய பேசாலைக்கிராமத்தில் எனது குடும்பத்துடன் சமூகப்பணியோடு வாழ்ந்து வருகின்றேன் எனது தந்தை சூசை ஞானமணி பச்சேக் தாயார் செல்லையா சூசையம்மா துரம் எனது மேரி யுஸ்ரீனா பறுநாந்து மனைவியுடன் பொன்விழாக்கண்டு சந்தோசமாக பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றேன்.
உங்கள் நகைச்சுவை நாடகங்கள் எழுதும் ஆற்றல் பற்றி---
நான் முன்பள்ளி ஆசிரியனாக இருந்ததனால் சிறுவர்களுடன் நகைச்சுவையாகத்தான் கற்பிப்பேன் அவ்வாறு கற்றுக்ககொடுத்தால் தான் அவர்களுக்கு இலகுவாகப்புரியும் அந்த முறையில் சில நாடகங்களை எழுதி நடிப்புடன் பாடங்களுக்கு ஏற்றவாறு கற்றுக்கொடுத்தேன் மாணவர்களுக்கு நன்கு பாடங்கள் தெளிவு பெற்றார்கள் அதையே எழுதி மாணவர்களே நடிக்கவேண்டும் என நினைத்தேன் அது தான் நான் நாடகம் எழுதக்காரணமாய் அமைந்தது எனலாம்.
அவ்வாறு நாடகம் எழுதியவை பற்றி—எனது நாடகங்ஙகள் சிறுவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் பெரியோர்கள் என எல்லோருக்கும் சேர்த்து அன்பு பண்பு பசம் உறுவுமுறை மனிதமாண்பு மூடத்தனம் பயம் அவநம்பிக்கை போன்ற விடையப்பொருள்களை கதைக்கருவாக வைத்து எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் மிகவும் நகைச்சுவையாகவே எழுதியுள்ளேன் எனக்கு ஞாபகம் உள்ளவரையில் மொத்தமாக 17 நாடகங்களை எழுதியுள்ளேன் அவற்றி சில நாடகங்கள் ஒரே நாளில் பலமுறை மேடையேற்றப்பட்டது. அத்துடன் மாட்டிக்கிட்டான் மன்றாடி இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபணத்தில் ஒளிபரப்பட்டது. பராட்டும் பெற்றது.
1975ம் ஆண்டு கொழும்பில் இருந்து வருகை தந்து பிரபலமான அறிவிப்பாளர் அப்துல் கமீட் என்னைப்பாராட்டியதோடு எனது நாடகக்குழுவினரையும் பாராட்டிச்சென்றார்.
உங்களது கல்விச்சேவை காலங்களைப்பற்றி---
எனது கல்விச்சேவை காலங்களைப்பற்றி சொல்லும் போது மனம் மகிழ்வடையும் என்னிடம் அதாவது நான் ஆரம்பப்பள்ளி ஆசிரியனாக இருந்தபோது என்னிடம் கற்றவர்கள் இன்று அருட்தந்தையர்களாக அருட்சகோதரிகளாக ஆசிரியர்களாக பொறியியலாளர்கள் மருத்துவர்கள் அதிபர்களாக என ஒவ்வொருதுறையிலும் மிளிர்கின்றார்கள் எந்த மாணவமாணவியருக்கும் ஆரம்பக்கல்விதான் முதலில் அமையும்
அது நன்றாக அமைந்தால் அவர்களின் வாழ்வு பிரகாசம்தான் என்னிடம் கற்றுக்கொண்ட மாணவர்களிடம் நான் உண்மையான ஆசிரியனாக சேவையாற்றி இருக்கின்றேன் என்பது வெளிப்படையான விடையம் இப்போதும் என்னைக்கண்டால் அந்தக்காலத்தில் இருந்த மதிப்பு அன்பு இன்னும் குறையவில்லை அந்தக்காலம் பசுமையானவை என்னைப்போல மாணவர்களுக்கும்.
உங்களது பணிக்காலம் பற்றி ........
பணிக்காலம் எனும் போது 37வருடங்கள் அதில் 26 வருடங்கள புனித பத்திமா பாடசாலையிலும் 17 வருடங்கள் பிரதி அதிபராகவும் இருந்தேன்.
எனது கல்விக்காலம் மற்றும் பணிக்காலம் எனும் போது
- பேசாலை றோ.க.த.க.பாடசாலை-1946-1950
- பேசாலை றோ.க.த.க.பாடசாலை-1951-1953
- யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி(மடுத்தினார் குருமடம்)-1954-1959
- கன்டி தேசிய குருமடம் -1960-1962
- தலைமன்னார் சென்.லோரன்ஸ் றோ.க.த.க.பாடசாலை-1964-1965
- கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை -1966-1967
- நுவரெலியா சென்.சேவியர் கல்லூரி-1968
- முத்தரிப்புத்துறை றோ.க.த.க.பாடசாலை-1968-1970
- பேசாலை பற்றிமா ம.ம.வித்தியாலயம்-1971-1996
- மன்னார் வாழ்வுதயம்-1997-2002
- தோட்டவெளி திருப்புமுணை-2007-இற்றை வரை
- மாணவர்களின் எழுத்தாற்றல் விருத்திக்காக….1970களில் வளர்மதி எனும் சஞ்சிகை ரோணியோ பதிப்பாக வெளியிட்டேன்.
- உறவும் இல்லை பகையும் இல்லை-முதல் மனிதன் ஆதாமிற்கு செய்தபிழைக்காக இறைவனையே குற்றவாளிக்கூண்டிலேற்றி மாற்றுக்கோணத்தில் வெளிவந்த நாடகம்.
- தட்டச்சும் செய்வேன் அறிவிப்பாளராகவும்
- விளையாட்டு வீரனாகவம் பாடகரகவும் இருந்திருக்கின்றேன்.
- மாட்டிக்கிட்டான் கரவலை மண்டாடி-(வீரபாண்டியன் கட்டப்பொம்மன் பாணியில்) அமைந்த நாடகம்.
- பண்டாரி பொண்டாட்டி
- பரிசு பெற்ற பண்டாரி-திருவிளையாடல் பாணியில் அமைந்த நாடகம்
- புனித வெற்றிநாயகி இளைஞர் ஒன்றியம் ஆரம்பித்த போது அதன் பொதச்செயலாளர் இருந்தேன்
- புனித செசீலியாள் மெல்லிசை மன்றத்தின் நிர்வாக உறுப்பினராக இருந்தேன் 1982 base guitar நன்கு இசைப்பேன்.
- 1960 பேசாலை நூலகப்பொறுப்பாளராக இருந்தேன்.
- பேசாலை வைத்தியசாலை சங்க செயலாளராக இருந்திருக்கின்றேன்
- 1989ம் ஆண்டு முத்தமிழ் மன்றமாம் பேசாலை வளர்கலை மன்றத்தினால் எனக்கு புனித வெற்றி நாயகி ஆலய அரங்கில் வைத்து கல்விச்சேவையாளர் விருதும் பரிசும் தந்து கௌரவித்தார்கள். உள்ளுர் மக்கள் பொன்னாடையும் போர்த்தி கௌரவப்படுத்தியுள்ளார்கள்.
- "நேசம் ஆயிரம்" எனும் நூல் அது எனது திருமணப்பொன்விழா சிறப்பு மலராக எனது பிள்ளைகளும் எனது மாணவர்க்களும் சேர்ந்து வெளியிட்ட நூல் மகிழ்ச்சிக்குரியது
“குடிநோயாளிகள்” மனம்மாறித்திருந்தும் வண்ணம் ஒரு குறியீட்டுகாட்சியை உருவமைத்திருந்தேன் அதில் திகிலடையும் வாசகங்களையும் குறித்திருந்தேன் அதாவது ஒருவன் குடிப்பதால் எவ்வாறு வாழ்க்கையை இழக்கின்றான் என்பதை அகாலமரணத்தினை சவப்பெட்டியுடன் துல்லியமாக காட்சிப்படுத்தி இருந்தேன திருப்புமுனை தோட்டவெளியில் பலரின் பாராட்டினையும் அத்தோடு பலர் குடியை விடுவதற்கு சாட்சியாக அமைந்தது.
“முயலும் சிங்கமும்” எனும் சிறுவர் நாடகத்தினை 23 சினிமாப்பாடல் இராகத்திற்கு ஏற்றவாறு எழுதியிருந்தேன். போசாலையில் 04முறை மேடையேற்றியுள்ளேன்.
கடைசியாக "பரபாஸ்" எனும் மேடை நாடகத்தினை அதாவது தற்கால சூழலை வைத்து எழுதியது அதுவம் சில காரணங்களால் கைவசம் இல்லை
சரித்திர நாடகங்களாக..........
விஜனின் இலங்கை வருகையை வைத்து "கடல் கடந்த வேந்தன்" எனும் 30 நிமிட மேடைநாடகத்தினை எழுதி மேடையேற்றினேன்.
"பண்டாரவன்னியன்" கதையினை 30நிமிட நாடகமாக மேடையேற்றினேன்.
நாடகம் என்றால் உங்களுக்கு யாரைப்பிடிக்கும்......
எமது ஊரில் பலர் இருக்கின்றார்கள் அவர்களோடு அயல் கிராமத்திலும் மன்னார் பகுதியில் உள்ள எனது பள்ளி மாணவன் அந்தோனிமுத்து அதுபோல குழந்தை மாஸ்ரர் இன்னும் பலர் இருக்கின்றார்கள்.
உங்களது நாடக ஆற்றல் ஏன் ஏனைய கிராமங்களுக்கு வெளிப்படவில்லை….
நல்ல கேள்வி நான் எனது கிராமத்தின் மக்களின் வாழ்வினை மையப்படுத்தி அவர்களின் வழக்கமான செல்லாடலையே எனது மேடை நகைச்சுவை நாடகமாக எழுதினேனே தவிர பொதுவாக எல்லோருக்கும் புடிக்கும் வகையில் எழுனேன் பெரும்பாலும் பேசாலை வட்டாரவழக்கு சொற்பிரயோகம் தான் அதிகம் அதனால் ஏனைய கிராமங்களுக்கு செல்லவில்லை. செல்ல நான் வாய்ப்பளிக்கவும் இல்லை.
நீங்கள் நாடகம் எழுதியன் நோக்கம் என்ன---
எனது நாடகங்கள் அனைத்தும் நகைச்சுவையுணர்வுமிக்கது காரணம் அப்போதைய சூழல் போர் அச்சத்தில் மக்கள் மிகவும் பயந்து வாழ்ந்தார்கள் அவர்களின் பயவுணர்வை இல்லாமலும் சந்தோஷமாக இருக்கவே நான் எனது நாடகத்தினை ஆயுதமாக பயன்படுத்தினேன் கொஞ்சம் வெற்றியும் கண்டேன்.
உங்களை நீங்கள் ஏன் அடையாளப்படுத்தவில்லை….
இதுவும் நல்ல கேள்விதான் நான் எனது ஆசிரியப்பணியாகிலும் சரி நாடகப்பணியாகிலும் சரி பொதுப்பணியாகிலும் சரி அப்போதும் இப்போதும் என்னை நான் தான் அடையாளப்படத்தாமல் இருந்திருக்கின்றேன் இருக்கின்றேன். என்னை சந்திப்பவர்கள் எனது உறவினர்கள் எனது நண்பர்கள் என்னை பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் கலந்து கொள்ளச்சொல்வார்கள் அதே நேரம் அதற்குரிய விண்ணப்பப்படிவங்களையும் கொணர்ந்து தருவார்கள் நான் எதையும் கண்டுகொள்வதில்லை எனக்கு ஏனோ அந்த எண்ணம் இல்லை இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கவேண்டும் அதேபோல் நாம் வாழும் சமூகத்தினரையும் சந்தோஷமாக வைத்திருக்கவேண்டும் என்பதுதான். எமது பொறுப்பு என்னவோ அதை திறம்பட செய்துமுடிக்கவேண்டும். அவ்வளவுதான்.
மன்னார் மண்ணில் உள்ள கலைஞர்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் நியூமன்னார் இணையம் பற்றி தங்களின் கருத்து---
அருமையான சேவை அதுவும் என்னைப்போன்றவர்களை வீடு தேடிவந்து உரையாடி தகவலைப்பெற்று வெளியுலகிற்கு கொண்டுவரும் சேவையை நான் மனதாரப்பாராட்டுகின்றேன். இலைமறைகாயாக இருக்கும் இன்னும் பலர் இருக்கின்றார்கள் அவர்களையும் நீங்கள் தான் வெளிக்கொணரவேண்டும். தொடரட்டும் உங்கள் பணி...... மனமகிழ்ச்சியுடன்.
சந்திப்பு-வை-கஜேந்திரன்-
கலைஞனின் அகம் கணணியில் முகம் விம்பம் பகுதியில்.....நேசம் மாஸ்ரர்.....
Reviewed by Author
on
September 16, 2017
Rating:

No comments:
Post a Comment